எதிர்பாராத வழியில் கிரியை செய்கிற மாறாத தேவன் Phoenix, Arizona, USA 62-0120 1நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய். நாம் இப்போது ஜெபத்திற்காக சற்று தலை வணங்குவோம். இந்த இரவில் உங்கள் மத்தியில் இருப்பதை குறித்து சந்தோஷமடைகிறேன். இப்பொழுது முதலாவது நாம் செய்ய விரும்புகிற காரியம் என்னவென்றால், நாம் காண வந்திருக்கிறதான அந்த ஒருவர் கர்த்தராகிய இயேசுவோடு பேசுவது தான். நாம் ஜெபிக்கலாம். எங்கள் பரலோக பிதாவே, எங்களுடைய இரட்சகராகிய உம்முடைய நேசகுமாரன் கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தில் பங்கு கொள்ளும்படிக்கு இந்த சிறிய சபையில் இன்றிரவு இருப்பதை நாங்கள் மாபெரும் சிலாக்கியமாக எண்ணுகிறோம். அவருடைய மகத்தான பரிகாரத்தினாலே அசுத்தமானவர்களாகிய, நாங்கள் சுத்தமாகும்படிக்கு தம்முடைய இரத்தத்தை சிந்தி எங்களுக்கு அவர் அருளின கிருபைக்காக நாங்கள் உமக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உலக முழுவதும் இருக்கிற சபைக்காகவும், எல்லாவிடத்திலும் இருக்கிற ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும், ஒவ்வொரு மேய்ப்பருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த இரவில், குறிப்பாக இந்த சபைக்காகவும் சபையின் மேய்ப்பருக்காகவும் வழிப் போக்கர்களாய் இந்த பட்டணத்தில் தங்கியிருக்கிற இந்த சிறு மந்தைக்காகவும் ஜெபிக்கிறோம். கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாகிய இவர்களை நீர் ஆசீர்வதியும் என்று ஜெபிக்கிறோம். சபை மூப்பர்களையும், தர்மகர்த்தாக்களையும் ஆசீர்வதியும். கிறிஸ்துவின் மூலமாய் நாங்கள் பெற்றிருக்கிற இந்த இசைவில் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளும்படி இந்த இரவில் வந்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியமாய் இருக்கிறது. இப்பொழுது இந்த இரவில், இங்கு இரட்சிக்கப்படாமல் இருக்கிற ஒவ்வொருவரையும் இரட்சிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம், கர்த்தாவே. வியாதியாயிருக்கிற ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். பரிசுத்த ஆவிக்காக பசியும், தாகமுமாயிருக்கிறவர்களை நிரப்பும். இந்த இரவில் வார்த்தையோடிரும். கர்த்தாவே, தொடர்ந்து நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், வார்த்தையின் தண்ணீரினால் கழுவிடும். கர்த்தாரகிய இயேசுவின் நாமத்தினாலே இதை நாங்கள் கேட்கிறோம் ஆமென். நீங்கள்அமரலாம். 2வழிப்போக்கர்களாய் இந்த பட்டணத்தின் எல்லையில் தங்கியிருக்கிற தேவனுடைய மந்தைக்கும், சகோதரன் சிரில் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இன்றிரவு என்னுடைய அருமையான நண்பர்களாகிய உங்களோடு இந்த நேரத்தில் ஐக்கியம் கொள்ளும்படிக்கு இங்கு இருப்பதைக் குறித்து சந்தோஷமடைகிறேன். அநேகர் நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. கர்த்தரிடத்திலிருந்து அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு சிறு செய்தியை பிரசங்கித்து, முக்கியமாக இது நாம் ஐக்கியம்கொள்ளும் ஒரு நேரமாகவே இருக்கும். நான் இந்த சகோதரனை எங்கேயோ இதற்கு முன் சந்தித்திருக்கிறேன். அவருடைய முகத்தை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய பெயர் எனக்கு மிகவும்அறிந்தததைப் போல் இருக்கிறது. எனவே, நாம் அனைவரும் தேவனின் மகத்தான படை வீரர்களாய் சாலையின் முடிவில் இறுதி வெற்றியை அடையும் படி வீர நடை போட்டு போய்க் கொண்டிருக்கிறோம். இங்கே யாத்திரையில் இருக்கிற கிறிஸ்தவர்களாகிய உங்கள் மேல் கர்த்தருடைய சமாதானம் இருப்பதாக. கர்த்தர் இந்த சிறு சபையை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன். இங்கே, இது மகத்தான பெரிய சபையாக வளரட்டும்; அங்கத்தினர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டும், பரிசுத்த ஆவியினால் வெளியரங்கமாக்கப்படுவதால் பாவம் (சபைக்கு) உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அவர்கள் பரிசுத்த ஆவிக்கு கீழ்படிந்தும் இருப்பார்களாக. அவ்விதமான சபையைத் தான் நாம் எதிர்பார்த்து, அதைப் பெற்றுக் கொள்ள நாம் போராடுகிறோம். இதெல்லாம் சாத்தியம் தான் என்று நான் நம்புகிறேன். 3இப்பொழுது இது சாத்தியம் தான், நாம் மட்டும் தேவனுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து, அவருடைய வார்த்தைக்கு செவி சாய்த்து, நம் முழு இருதயத்தோடும் இயேசுவை விசுவாசித்தால் இவ்விதமான காரியங்கள் நிகழக் கூடிய சபை எழும்பும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒரு அங்கத்தினர் கூட பாவம் செய்யாமலும், பாவம் என்பதே இல்லாத அளவுக்கு அவ்வளவாக தேவனுடைய பிரசன்னத்தினால் நிரப்பப்பட்டு, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியோடு இசைந்திருக்கும் சபைக்குள்ளாக வரவேண்டும் என்பது ஒவ்வொரு ஊழியக்காரனின் இருதய வாஞ்சை என்பதை நான் அறிவேன். தங்கள் ஜீவியத்தில் பாவத்தை கொண்டிருப்பவர்கள் அப்படிப்பட்ட பிரசன்னத்தினால் நிறைந்த சபைக்குள்ளாக வந்த மாத்திரத்தில் உள்ளே வருவதை குறித்து மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அப்பொழுதே “இன்ன, இன்ன, காரியம் இது” என்று சத்தமிடுவார் (வெளிப்படுத்துவார்.) இப்பொழுது நாம் அந்த விதமாகத் தான் இருக்க வேண்டும், நண்பர்களே. அந்த மாதிரியான சபை, அதைப் பெற்றுக் கொள்ளதான் நாம் போராடுகிறோம், சகோதரர்களே. அதற்காகத் தானே நாம் போராடுகிறோம்? (சகோதரர்கள், ''ஆமென்“ என்கின்றனர்) அதற்காக தான் நாம் அனைவரும் போராடுகிறோம் மற்றும் அதை பெற்றுக் கொள்வோம் என்று எதிப்பார்த்து நம்புகிறோம். 4இங்கே நான் ஃபீனிக்ஸில் இருப்பதற்கான நோக்கம் கிறிஸ்துவ வியாபார நபர்களுடைய கூட்டங்களில் இருக்கும்படி வந்திருக்கிறேன். இந்த அருமையான சகோதர கூட்டத்தாரிடத்திலும், வெவ்வேறு ஸ்தாபனத்தார் மற்றும் இது போன்ற கூட்டத்தார் மத்தியில் கடந்து சென்ற போது அவர்கள் மிகவும் அருமையானவர்களாய் இருந்தார்கள். சகோதரன் வில்லியம்ஸ் இங்கே இருக்கிறார். மேலும் இங்கே இருக்கிற சிறு சபைகளும், சகோதரர்களாகிய நீங்களும், இங்கே உங்களிடத்தில் வரும்படிக்கு எனக்கு அழைப்புக் கொடுத்து, உங்களோடு கூட இந்த ஐக்கியத்தை வைத்துக் கொள்ள எனக்கு மிகவும்அருமையானவர்களாய் இருந்தீர்கள். நான் அதைக் குறித்து மிகவும் சந்தோஷமடைகிறேன். ஏனென்றால் நான் என் சகோதரர்களோடு ஐக்கியம் கொள்ளவே விரும்புகிறேன். இயேசு இவ்விதமாய் கூறினார் என்று நினைக்கிறேன் ''நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று அதின் நிமித்தம் எல்லா மனுஷரும் அறிந்து கொள்வார்கள்“, எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா, அது அவருடைய அன்பினாலே ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளும்போது தான். 5இப்பொழுது நாம் மூன்று இரவுக் கொண்டிருக்கிறோம். கடந்த இரவு ''டெம்பே“ என்ற இடத்தில் சகோதரன் அவுட்லா சபையில் மகத்தான நேரத்தை கொண்டிருந்தோம். அதன் பிறகு இங்கே நான் சுற்றிப் பார்த்தபோது, நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு முதல் நாள் இரவு மேற்கு ஃபீனிக்ஸின் பின்புறத்தில் இருந்தோம். நாளை காலை பத்து மணிக்கு சகோதரன் ஃபுல்லர்ஸிடம் என்று நினைக்கிறேன். நாளை இரவு இந்தியன் சாலை அல்லது இந்திய பள்ளிக்கூட சாலையில் உள்ள விசுவாச கூடாரத்தில் அல்லது அது போன்று ஒரு இடத்தில் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் முற்றிலும் குழம்பிவிட்டேன். அது எந்த இடம்? (யாரோ ஒருவர்,''மெக்டௌவல் சாலை” என்கிறார்). மெக்டௌவல்? (மெக்டௌவல் சாலை). அது மெக்டௌவல் சாலையில் உள்ள விசுவாச கூடாரம். ஓ, என்ன‚ இந்திய பள்ளிக்கூட சாலை. அது வேறு காரியமாக இல்லையா? அது கல்வாரி...? (''ஐக்கிய கூடாரம்“) ஐக்கிய கூடாரம். நான் முற்றிலும் குழம்பிவிட்டேன். நான் முழுவதும் குழம்பிப்போய் இருக்கிறேன். இப்பொழுது, வெளியே வரும்போது ”ஐக்கிய கூடாரம்“ என்று பில்லி என்னிடத்தில் கூறினதை கேள்விப்பட்டேன். இங்கே இருக்கிற மக்களாகிய நீங்கள் நாளை காலையும் நாளை இரவும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையில் நிற்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் வெறும் விருந்தினர்களாக இங்கு வந்திருக்கிறோம். நீங்கள் ஒரு சபையில் இருந்து இன்னொரு சபைக்குப் போக நாங்கள் விரும்பவில்லை. அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் நாம் சந்தித்து ஐக்கியம் கொள்ளலாம். பாருங்கள். ஆனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமை உங்கள் சபையில் தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த நேரத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட கடமையில் நிற்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். 6எனவே இன்று நான் ஒரு சகோதரனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நம்மெல்லாருக்கும் விலையேறப் பெற்ற நண்பரும், நாம் அனைவரும் அறிந்திருக்கிறவருமான சகோதரன் ஷாரிட், ஜான் ஷர்ரிட், அவர் மனிதரில் ஒரு இளவரசன். அவர், ''சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என்றோ ஒரு நாளில் மேற்கு பகுதிக்கு வந்து வசிக்கப் போவதாக அநேக முறை நீர் சொல்லக் கேட்டிருக்கிறேன்“ என்றார். அதற்கு நான், ஆமாம் என்னை கிழக்கில் இருக்கும்படி கட்டி வைத்திருந்த கடைசிப் பிடிப்பாகிய என் தாயாரும் இப்பொழுது கடந்து போய்விட்டார்கள். அவர் சில நாட்களுக்கு முன்பு இயேசுவோடு இருக்கும்படி வீட்டிற்கு கடந்து போனார்கள் மற்றும் என்னுடைய மனைவியின் தாயாரும் கடந்து போனார்கள். ஆகவே, நாங்கள் தங்குவதற்கு இடத்தை தேடிகொண்டிருப்பது உண்மைதான். ஃபீனிக்ஸ், டூசானில் இருக்கும்படி தேவன் அனுமதிப்பார் என்றால் நான் ஒருபோதும் சபையை துவங்க மாட்டேன். இல்லை ஐயா, நான் அப்படி செய்ய மாட்டேன். நான் ஒரு மிஷினரி‚ அப்படி இங்கே வரும்போது நான் ஒவ்வொரு சபைக்கும் சென்று ஐக்கியம் கொள்ளவே விரும்புகிறேன். 7இங்கே உங்களுக்கு அருமையான சபைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். நமக்கு அதிகமான சபைகள் இருக்கின்றன. அவைகளை (சபைகளை) நாம் நிரம்பச் செய்ய வேண்டும்; அவ்வளவுதான். அதுதான் நமக்கு தேவையாயிருக்கிறது. ஆமாம். நாம் அதைத் தான் செய்கிறோம், காரணம் ஒரு நபர் ஒரு புதிய சபையை எந்த இடத்திலும் துவங்கும் போது, பாருங்கள், அது இங்கிருந்தும், அங்கிருந்தும் கொஞ்சம் இழுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதுவல்ல நாம் செய்ய வேண்டிய காரியம். அப்படியாக தேவன் என்னை வழி நடத்துவாரனால், இது இன்னொரு சபையை ஆரம்பிப்பதற்காக இல்லை என்பதை இந்த சகோதரர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் அப்படியாக ஒரு போதும் செய்யமாட்டேன். பாருங்கள்‚ இங்கே வருவது உங்கள் ஒவ்வொருவரோடும் எல்லாரோடும் ஐக்கியம் கொண்டு மகத்தான நேரத்தை கர்த்தரில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. 8இப்பொழுது இந்த முழு சுவிசேஷ வியாபார சகோதரர்களின் கூட்டத்தை நீங்கள் மறவாதீர்கள். இவர்கள் உங்கள் எல்லா சபைகளிலிருந்தும் உண்டானவர்கள். அடுத்த வாரம் வியாழன் மாலை அவர்களின் ஐக்கிய கூட்டம் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். அது சரியா, சகோதரன் வில்லியம்ஸ்? அது வான்புரன் தெருவில் கிழக்கு பகுதியில் இருக்கிறதான ரமடாவில் நடக்கிறது. சில பிரசித்தி பெற்ற பிரசங்கிகளும் இந்த கூட்டத்திற்கு வருகைத் தர இருக்கிறார்கள். நானும் அதில் கலந்து கொண்டு அவர்கள் பேசுவதை கேட்க விரும்புகிறேன். தனிச் சிறப்பு வாய்ந்த பிரசங்கி, சகோதரன் ''வெல்மர் கார்ட்னர்“ மற்றும் அநேக சகோதரர்களும் பேச இருக்கிறார்கள். இதுவரை நான் கேள்விபடாத சில வியாபார சகோதரர்கள், அவர்கள் அற்புதமான பிரசங்கிகள் என்று சொல்கிறார்கள். அவர்கள் பேசுவதை கேட்க நான் சந்தோஷப்படுகிறேன், இது எனக்கு கிடைத்த தருணம். ஆகவே உங்கள் யாவரையும் அங்கே சந்திக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். திட்டமிட்டபடி அந்த வழியில் நடக்குமானால், சனிக்கிழமை காலை உணவுக் கூட்டத்தில் நான் பேசுவேன் என்று நம்புகிறேன். அதை தொடந்து வருகிறதான ஞாயிறு பிற்பகல் கூட்டத்திலும் பேசுவேன் என்றும் விலையேறப் பெற்ற உங்கள் யாவரையும் அங்கு சந்திப்பேன் என்றும் நம்புகிறேன். 9இப்பொழுது, நீங்கள் இன்றிரவு சீக்கிரமாக போக வேண்டிய காரணத்தால் உங்களை அதிக நேரம் இங்கே நிற்க வைக்க விரும்பவில்லை. நீங்கள் மறுபடியும் இங்கே நாளை காலை ஞாயிறு ஆராதனையில் கலந்து கொள்ளயிருப்பதால் நாம் பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கெல்லாம் இங்கிருந்து புறப்படலாம். அவ்விதமாக நாங்கள் செய்யமாட்டோம். இங்கே உள்ள மொழிப் பெயர்ப்பாளர் ''அதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது“ என்றார். அங்கே உள்ள மக்களும், நானும் அந்த மனிதனின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையை பார்க்கிறோம். 10இப்பொழுது நாம் துரிதப்பட்டு வேதத்திலிருந்து சில வார்த்தைகளை தியானிப்போம். நான் நீண்டநேரம் பிரசங்கிக்கிற பிரசங்கி என்று யூகிக்கிறேன். நான் பாப்டிஸ்டு சபையில் இருந்தபோது, முதன்முறையாக என்னுடைய பெந்தெகொஸ்தே சகோதரர்கள் மத்தியில் வந்தபோது, உங்களுக்கு தெரியும், நான் என்னுடைய கையில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு உண்மையிலே என்னை ஒரு பிரசங்கி என்று நினைப்பது வழக்கம். ஒரு நாளில் பெந்தெகொஸ்தே மக்களிடையே சங்கை. திரு. டௌட்டி பிரசங்கிப்பதை கேட்கும்படி சென்றிருந்தேன். என்னே‚ அவர் தன் மூச்சை பிடித்து, முழங்கால் முட்டியை மடக்கிக் கொண்டு தன் ஜீவன்போகும் அளவுக்கு சத்தமாக பிரசங்கித்தார். அவருடைய பிரசங்கத்தை இரண்டு பெருவீதி தாண்டிக் கூட கேட்கலாம். அதற்கு பிறகு திரும்பி வந்து நான் மறுபடியும் பிரசங்கிக்க தொடங்கினபோது, என்னைக் குறித்து கூறியதைப் பற்றி நான் ஜாக்கிரதையாய் இருந்தேன். நான் மெதுவாக பிரசங்கித்து பழக்கப்பட்டு இருக்கிறேன். நான் ஆரம்பத்திலேயே ஒரு தெற்கத்தியன், மெதுவாக ஆரம்பித்து எப்பொழுதும் கால தாமதமாக முடிப்பது வழக்கம். ஆகவே சில நிமிடங்கள் என்னோடு பொறுத்துக் கொள்ளுங்கள். என்னால் முடிந்தவரை நான் துரிதமாய் செல்லுவேன். ஆனால் தேவன் தாமே அவருடைய வார்த்தையிலிருந்து சிலவற்றை நமக்குக் கொடுத்து அவருக்கு நெருங்கி வர அது தாமே நமக்கு உதவிசெய்யும் என்று நான் விசுவாசிக்கிறேன். 11இப்பொழுது மல்கியா 3-ம் அதிகாரம் 6-ம் வசனத்தின் முதல் பகுதியை வாசிக்க விரும்புகிறேன். நான் கர்த்தர் நான் மாறாதவர்.... ''எதிர்பாராத வழியில் கிரியை செய்கிறமாறாத தேவன்“ என்கிற சிறிய பொருளை, அது தேவனைப் பிரியப்படுத்துமானால் அதின் மேல் பேச விரும்புகிறேன். எதிர்பாராத வழியில் கிரியை செய்கிற மாறாத தேவன். இப்பொழுது நாம் மாற்றம் ஏற்படுகிற ஒரு நேரத்தில் ஜீவிக்கிறோம். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியிலிருந்து வருகிறதான எந்த பொருளாய் இருந்தாலும் உங்கள் கண்களால் காணக் கூடிய எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. 12சில நாட்களுக்கு முன்பாக நான் ஃபீனிக்ஸ்க்கு முதல் தடவை வந்தபோது... இந்த செப்டம்பர் வந்தால் நான் ஃபீனிக்ஸ்க்கு வந்து சரியாக முப்பத்தைந்து வருடங்களாகிறது என்று நினைக்கிறேன். நான் ஹென்ஷாவில், பதினாறாம் எண்ணில், அந்த பாலைவனத்தில் தங்கியிருந்தேன். இப்பொழுது நான் அங்கே சென்று பார்த்தபோது நான் தங்கியிருந்த வீடு காணாமல் போனது. இப்பொழுது அந்த இடம் ஒரு பட்டணமாகி அங்கே எரிபொருள் நிரப்பும் நிலையம் இருக்கிறது. அந்த சாலை பெயர் கூட ஹென்ஷா என்பதிலிருந்து பக்ஹை என்று மாற்றப்பட்டுள்ளது. ஏன்? நீங்கள் அங்கே சுற்றி இருக்கிறவர்களை விசாரிக்கவில்லை என்றால் நீங்கள் அந்த இடத்தை கண்டுபிடிக்கவே முடியாது. அதெல்லாம் இந்த முப்பத்தைந்து வருடங்களுக்குள்ளாக நடந்தது. எல்லாமே பார்ப்பதற்கு வித்தியாசமாய் உள்ளது. அங்கே, உப்புநதி பள்ளத்தாக்கில் பெரிய அணைத் திட்டமானது இருந்தது. நான் அங்கே சென்றதை நினைவுகூறுகிறேன். அங்கே நானும் என்னோடு இருந்த வாலிபனும் குதிரையின் மேலாக ஏறி முயல் போன்றவைகளை துரத்திக் கொண்டிருந்தோம்.இப்பொழுதோ அது ஒரு வனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே ஃபீனிக்ஸ், ஒரு மலையிலிருந்து இன்னொரு மலை வரைக்கும் வளர்ந்துவிட்டது. இந்த பகுதி முழுவதும் நிரம்பிவிட்டது. உண்மையிலே ஒரு மாற்றத்தை பெற்றதாய் இருக்கிறது. இப்பொழுது நான் வழியை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. நான் முதலில் வந்த போது ஜனத்தொகை முப்பத்தைந்து அல்லது நாற்பதாயிரம் தான் இருந்தது, ஆனால் இன்றைக்கு ஐந்து லட்சம் பேரைக் கொண்டதாயிருக்கிறது. எப்படியாக இந்த இடமானது மாறிவிட்டது. இது எதைக் காட்டுகிறது என்றால் இது காலம் போகிற போக்கிலே சரியாய் போய்க் கொண்டிருக்கிறது. காலம் மாறும் போது இதுவும் மாறுகிறது. ஃபீனிக்ஸ் மாறிக் கொண்டிருக்கிறது. மற்ற இடங்களும் மாறிக் கொண்டிருக்கிறது. 13சாலைகளும் மாறிப் போனதை நான் கவனித்திருக்கிறேன். நீங்கள் உபயோகப்படுத்தின சாலையானது இப்பொழுது இல்லை. அவைகள் அங்கே இல்லாமல் போனது. அவை எல்லாம் வேறேதோ வழியில் போய்விட்டன. நீங்கள் வந்த அதே பாதையில் பின்தொடர முயலுவீர்கள் என்றால் வனாந்திரத்தில் எங்கேயாவது சென்று தொலைந்து போய் விடுவீர்கள். ஆகவே சாலைகளும் மாறிவிட்டன. பட்டணங்களும் மாறிவிட்டன. அரசியலும் மாறிவிட்டன. வருஷா வருஷம் அவைகள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன. அரசியல்கள் மாறுகின்றன. மற்றும் தேசங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. வருடந்தோறும் தேசங்கள் மாறுகின்றன. அவைகள் தங்கள் நடத்தைகளை மாற்றுகின்றன. தங்கள் திட்டங்களை மாற்றுகின்றன. 14நான் இடங்களை கவனிக்கும் போது அதின் காட்சிகள் (அமைப்பு) மாறிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மரங்களை வெட்டிப் போடுகிறார்கள், மற்றும் மலைகளை தகர்த்துப் போடுகிறார்கள். ப்ளோரிடா கடலோரப் பகுதிக்கு முதலில் சென்றிருப்பீர்கள் என்றால் நீங்கள் கடல் தண்ணீரை தவிர வேறு எதையும் கண்டிருக்க மாட்டீர்கள். அடுத்த முறை நீங்கள் போகும்போது அங்கு எங்கேயோ ஒரு தீவை உருவாக்கி, புதிய வீடுகளை கட்டியிருப்பார்கள். மனிதனால் கட்டப்பட்ட தீவுகளை உருவாக்குகிறார்கள், அவர்கள் நீர் இறைக்கும் பெரிய பம்புகளை கடலுக்குள் செலுத்தி தண்ணீரை மேலே எடுத்து நிலத்தின் மேல் இறைத்து நிலத்தை சமன் செய்யும் இயந்திரத்தைக் கொண்டு சமன் செய்து வீடுகளை கட்டி பட்டணத்தை அதன் மேல் உண்டாக்கி தீவுகளை கட்டுகிறார்கள். ஒரு முயல் கூட போக முடியாத இங்கு உள்ள மலைகளின் உச்சியை அவர்கள் தகர்த்து போடுகிறார்கள். அங்கே மேலே லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புடைய வீடுகளை கட்டுகிறார்கள். 15காட்சிகள் மாறுகின்றன. நாங்கள் மக்கள் மாறுகிறதை கவனித்திருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் மக்கள் அன்றைக்கு இருக்கும் மக்களைப் போல் நட்புணர்வோடு இருப்பதில்லை. அதை இங்கே நீங்கள் கவனித்திருக்கிறீர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் நிச்சயமாக அங்கே தெற்கிலும் கிழக்கிலும் கவனித்திருக்கிறோம். வருடா வருடம் மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அவசரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இதை செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மிகவும் வேகமாக போகிறார்கள். அவர்கள் சாலையில் தங்கள் வாகனம் இன்னொரு வாகனத்தின் முட்டுத் தாங்கிக்கு (Bumper) நெருக்கமாக செல்லும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு தொன்னூறு மைல்கள் வேகத்தில் சென்று, பீர் குடிக்கும் சந்திப்பில் வாகனத்தை நிறுத்தி இரண்டு மணி நேரத்திற்கு அங்கேதங்கி பீர் குடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்கள். அது மாற்றத்தை காண்பிக்கிறது. அவர்கள் துரிதமாக எங்கே போகிறார்கள் என்று தெரியவில்லை? 16நீங்கள் கவனிப்பீர்களானால், இன்றைக்கு உள்ள பெண்கள் துணி துவைக்கும் இயந்திரங்கள், மின்சார இஸ்திரி பெட்டிகள், பொத்தானை இயக்கி பாத்திரங்கள் கழுவும் இயந்திரங்கள் மற்றும் அது போன்ற காரியங்களை பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் பெற்றிருந்தும் முன்பு இருந்ததை விட இப்பொழுது அவர்களுக்கு ஜெபிப்பதற்கு குறைவான நேரமே இருக்கிறது. சூசன்னா வெஸ்லியை குறித்து உங்களுக்கு தெரியும். அவர்களுக்கு பதினேழு பிள்ளைகள் இருந்தார்கள். அவள் அந்த பதினேழு பிள்ளைகளோடு நீரூற்றுகளுக்கு சென்று தண்ணீரை எடுத்து தன்னுடைய கைகளினாலே துணிகளை துவைப்பதுண்டு. எனினும் அவளால் பிள்ளைகளோடு, அந்த பதினேழு சிறு பிள்ளைகளோடு தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஜெபிப்பதுண்டு. அந்த பிள்ளைகள் மத்தியிலிருந்து ஜான் வெஸ்லியும், சார்லஸ்சும் எழும்பினார்கள். இன்றைக்கு அதுதான் காரியம், காரணம் நம்முடைய பள்ளிகளில் எந்த ஒரு ஊழியகாரனும் உள்ளே வரக் கூடாது என்று வாலிபர்கள் விரும்புகிறார்கள். நம்முடைய பள்ளிகளை நிரப்புவதற்கு நமக்கு இன்னும் சில ஜெபிக்கிற தகப்பனார்களும், தாய்மார்களும் அவசியமாயிருக்கிறது. மேலும் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தினால் உள்ளம் கொழுந்து விட்டு எரிகிற வாலிபர்கள் நமக்குத் தேவையாய் இருக்கிறது. ஆனால் காரியமோ மாறிக் கொண்டிருக்கிறது. 17நாம் இன்னுமாக மக்களிடத்தில் நெருங்கிச் சென்று, அவர்களை சபையில் கொண்டுவர முடியும். சபையும் மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய சபைகள் எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறதை நாம் காண்கிறோம். நாம் நிச்சயமாகவே கிட்டதட்ட மாறிவிட்டோம். நான் இப்பொழுது உலகம் முழுவதும் இருக்கும் சபைகளைக் குறித்து பொதுவாக பேசுகிறேன். நாம், மக்கள் இரட்சிக்கப்படுவதை பார்க்கிலும் அதிகமாக சபையில் ஆட்களை சேர்ப்பதிலே நாட்டம் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது இவ்விதமாக காணப்படுகிறது. அதென்னவெனில், எல்லோருமே இழக்கப்பட்ட பரிதாபமான ஆத்துமாவை குறித்து சிந்திப்பதை விட்டு அதிகமான எண்ணிக்கையை வைத்திருக்க வேண்டும் என்றும், பெரிய சபையாய் இருக்கவேண்டும் என்றும், பெரிய கட்டிடத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும், அல்லது பெரிய ஸ்தாபனமாக இருக்கவேண்டும் அல்லது வேறு ஏதோ ஒன்றாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அது மிகவும் மோசமானது, ஆனால் நம்மில் அநேகர் அப்படியாய் செய்து கொண்டிருக்கிறோம். 18பிரசித்திப் பெற்ற சுவிசேஷகர் சகோ. பில்லி கிரஹாம் கென்டக்கி லூயிவில்லில் பேசினதை கேட்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பரான டாக்டர் மொர்தேகாய் ஹாம்முடன் அங்கே அழைக்கப்பட்டிருந்தேன், சகோ. பில்லி, அவருடைய பிரசங்கத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டவர். அவர்களோடு கூட காலை உணவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே திரு. கிரஹாம் வல்லமையாக பேசினார். அவர், ''நான் ஒரு பட்டணத்திற்கு சென்று அங்கே ஆறு வாரம் தங்கியிருப்பேன். அப்பொழுது தங்கள் பாவத்தை அறிக்கையிடுகிற ஏறத்தாழ இருபதாயிரம் மக்களை பெற்றுக் கொள்வேன்.பின்னர் அவர்கள் எல்லாருடைய குறிப்புகளையும் மற்ற விவரத்தையும் அங்கிருக்கும் ஊழியக்காரர்களிடத்தில் கொடுத்து விடுவேன். பின்பு நான் அடுத்த வருடம், இருபதாயிரம் மக்கள் மனமாற்றம் அடைந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர்களில் இருபது பேரைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை“. ''என்னதான் நடந்தது? என்றார்”. 19நான் இதில் சற்று முரண்படுகிறேன். அந்த மகத்தான சுவிசேஷகர் திரு. கிரஹாமிடத்தில் இருந்து வித்தியாசப்படுவதற்காக அல்ல. நிச்சயமாக அல்ல. ஆனால், “அவர் என்னதான் நடந்தது”? என்று கூறினதின் நிமித்தமாகத்தான். அவர் தன்னுடைய விரலை சுட்டிக் காட்டி 'அதிகமான சோம்பேறி பிரசங்கிமார்கள் இரவும் பகலுமாக தங்கள் பாதங்களை மேஜையின் மீதாக வைத்துக் கொண்டு அந்த மனமாற்றம் அடைந்தவர்களின் குறிப்புகளை எடுத்துக் கொண்டுபின் தொடராததே காரணம்“ என்றார். மேலும் அவர், “பவுல் இங்கே இருந்தபோது அவர் ஒரு பட்டணத்துக்குச் சென்று ஒரு நபரை மனமாற்றத்திற்கு வழிநடத்துவார். அடுத்த வருடம் பவுல் அங்கு செல்லும்போது அந்த மனமாற்றமடைந்த ஒரு நபர் நிமித்தம் முப்பது அல்லது நாற்பது ஆத்துமாக்களை பெற்றுக் கொள்வார். அவர் (பவுல்) அந்த ஒரு நபரின் மனமாற்றத்தின் நிமித்தம் கொள்ளுப் பேரன்களையும் அதற்கு அடுத்து, அடுத்து, அடுத்து வந்த கொள்ளுப் பேரன்களையும் பெற்றுக் கொண்டார். பாருங்கள், ''நானோ முப்பதாயிரம் அல்லது இருபதாயிரம் மனமாற்றமடைந்தவர்களை பெற்று, அடுத்த வருடம் அங்கு போகும் போது இருபது ஆத்துமாக்களை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை”, என்றார். 20நல்லது, நான் பெந்தெகொஸ்தேயனாக இருந்ததினாலே அப்படி நடந்திருக்கலாம். ஆனால் நான் இதை கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் என்னால் சொல்லாமல் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் இப்படி நினைத்தேன்,“பவுல் அந்த நபரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தினபோது எந்த சோம்பேறியான பிரசங்கி தன் கால்களை மேஜையின் மேலாக வைத்திருந்தான்? பாருங்கள்‚ அதற்கு காரணம் அந்த மனமாற்றமடைந்த நபர்தாமே ஒரு உறுதியை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு தேவனுக்குள் அவ்வளவு ஆழமாக வழி நடத்தப்பட்டதின் நிமித்தமே. ஒரு மனிதன் மாத்திரம் தேவனை உறுதியாக பிடித்துக் கொள்ளும் போது, தேவன் அந்த மனிதனுடைய இருதயத்துக்குள்ளாக வருவார். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அவன் தேவனுக்குள் ஆழமாயும் அவனுடைய முழு ஜீவியமும் கிறிஸ்துவுக்குள்ளாக வேரூன்றி நடப்பட்டிருப்பதினால், தீப்பொறியானது அவனுடைய எல்லா பக்கத்திலிருந்தும் பறக்கும், பார்த்தீர்களா‚ ஆகவே அது வெறும் சோம்பேறி பிரசங்கிகளால் அல்ல என்று நாம் அறிந்திருக்கிறோம். அதற்கு காரணம் அந்த மனமாற்றம் அடைந்தவன் உலக காரியங்களையும், உலக ஆசையும் இழந்து போகும் அளவுக்கு அவன் தேவனுக்குள் ஆழமாக போகாததே. அவன் மட்டும் தேவனுக்கு நெருங்கி போகும்போது அவன் அதை செய்யமாட்டான். சபைகள் மாறுகிறதையும், மக்கள் மாறுகிறதையும் நாம் பார்க்கிறோம். சாலைகள் மாறுகிறது. இயற்கை காட்சிகள் மாறுகிறது. அரசியல் மாறுகிறது. ஆனால் ஒரு காரியம் மாத்திரம் மாறுவதில்லை, ''அது தேவன்“. அவர் எப்பொழுதும் மாறாதவராய் இருக்கிறார். ''நான் கர்த்தர்; நான் மாறாதவர்”. அது எவ்வளவு காலமாக இருந்தாலும் சரி, ஒரு சிறு துளி கூட தேவன் மாறுவதில்லை, அவரால் மாறவே முடியாது. அது எப்பேற்பட்ட இடம்‚ அவர் மாறாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், தேவன் முடிவில்லாதவராய் இருக்கிறார். முடிவில்லாதிருக்கிற எதுவும் மாறாது. 21நாம் வேதவாக்கியத்திற்கு போவதற்கு முன்பாக இதை சற்று தியானிப்போம். முடிவில்லாதது என்றால், அதற்கு முடிவு என்பதே இல்லை. அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. அவர் மகா வல்லமையான தேவன், சர்வ வல்லமையுள்ளவர், சர்வ வியாபி, சர்வ ஞானி, எல்லா காரியங்களையும், இடங்களையும், நேரங்களையும் அறிந்த மகா வல்லமையான தேவன். அவர் தேவன் அவர் மாறுவதில்லை. இப்பொழுது, நான் ஒரு தீர்மானத்தை எடுத்து,இது இவ்விதமாக நடக்கும் என்று சொல்லுவேன். நானோ முடிவைவுடையவன் (Finite). ஆகவே, காரியங்கள் இவ்விதமாய் நடந்ததினால் என் தீர்மானங்களை மாற்றி விட்டு நான் தவறாய் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஆனால் தேவன் அப்படி செய்யமுடியாது, ஏனென்றால் அவர் எடுத்த ஒரு முடிவானது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். அவர் அவருடைய முடிவுகளை மாற்றமுடியாது. அவர் அதை மாற்றமாட்டார். 22எனவே தேவனுடைய மனப்பான்மையானது ஒருபாவி மனந்திரும்ப வேண்டும் என்றிருக்கும் போது, ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பின்புஅவர்கள் மனந்திரும்பத்தக்கதாக ஒரு வழியை ஏற்படுத்தி அவர்களை மன்னித்தார் என்றால், அடுத்தபடியாகஇன்னொரு பாவி வரும்போது அவர் முதல் பாவிக்கு என்ன செய்தாரோ அதையே தான் இந்த பாவியினிடத்திலும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். அவர் அப்படிசெய்யவில்லை என்றால் அவர் முதல் பாவியை மன்னித்தது தவறாகிவிடும். ஒரு மனிதன் வியாதியாய் இருந்து, தேவன் அவனை சுகப்படுத்துவாரென்றால், அடுத்து இன்னொரு வியாதிப்பட்டவன் அதே அடிப்படையில் அவரிடத்தில் வரும் போது அதே காரியத்தை அவனுக்கு அவர் செய்ய வேண்டும் அல்லது அவர் முதல் நபரை சுகப்படுத்தினது தவறாகிவிடும். அப்படியானால், புகலிடம் தேடுகிற ஆத்துமாவுக்கு இது எப்பேற்பட்ட இளைப்பாறும் இடமாய் இருக்கிறது‚ 23''ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது“, இப்பொழுது உலகம் எப்படி இங்கே வந்தது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம், பாருங்கள்‚ தேவனுடைய வார்த்தை இந்த உலகத்தை சிருஷ்டித்தது. எபிரெயர் 11-ல் ”இந்த உலகமானது காணக்க கூடாதவைகளினாலே உருவாக்கப்பட்டது“ என்று எழுதியிருக்கிறது. பாருங்கள்‚ தேவன் பேச அது சிருஷ்டிக்கப்பட்டது ஏனென்றால் அவர் தேவன். அவர் வெறுமனே ''உண்டாகக்கடவது” என்று சொன்னபோது அது அப்படியே ஆயிற்று. ஆதியிலே வார்த்தை இருந்தது, மற்றும் அந்த உரைக்கப்பட்ட வார்த்தை சிருஷ்டிக்கிற வார்த்தையாய் இருந்தது, உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பிழை நிமித்தமாக நிறைவேற்றப்படாமல் அது திரும்பவும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேலும், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியிலே வாசம் செய்தது”.அது கிறிஸ்துவே. இப்பொழுது வேதத்தில் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை அது நமக்காக கொடுக்கப்பட்ட அவருடைய வார்த்தையாயிருக்கிறது. நாம் மட்டும் அது தேவனுடைய வார்த்தை தான் என்று விசுவாசிக்கும் போது, ஆதியில் தேவனுடைய வார்த்தை காரியங்களை எப்படியாக சிருஷ்டித்ததோ, ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அதே சிருஷ்டிக்கும் வல்லமையை பெற்றிருக்கிறது. விதையானது எங்கே விழுகிறதோ அதைப் பொறுத்ததாய் இருக்கிறது. விதையானது சிருஷ்டிக்கும் நிலத்திலே விழுந்து, ஈரப்பதமும் அல்லது ஊட்டச்சத்தும் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு கிடைக்கும் போது வேதத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற செய்யும். ஏனெனில் தேவனுடைய எந்த தெய்வீக வாக்குத்தத்தத்தையும் சரியான மனதின் தன்மையோடு அணுகி, அதை கவனித்து, சரியாக பராமரிக்கும் போது அதை நிறைவேறச் செய்யும். ஏனெனில் முடிவில்லாத தேவன் அந்த, “தேவனுடைய வார்த்தையை” பேசினார். 24''வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை“ என்று இயேசு சொன்னார். ஓ, ''வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை” என்று கூறின தேவனுடைய குமாரனின் தெய்வீக வாக்குத்தத்தத்தின் மேல் நாம் எவ்வளவாக இளைப்பாற வேண்டியதாயிருக்கிறது. ஆத்துமா இளைப்பாறக் கூடிய இடம் ஒன்று இருக்கிறது. இப்பொழுது இயேசு அவருடைய வார்த்தையிலே,''நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை நான் உங்களுக்கு தருவேன்“ என்று சொன்னார். ஆனால் சில நேரங்களில் நாம் கேட்டுக் கொண்ட காரியத்திற்கு தேவன் வேறு விதமாக செயல்பட்டு, வேறு விதமாக செய்யும்போது, அது எதிர்பாராத வழியில் வருகிறதாயிருக்கிறது, சில நேரங்களில் எதிர் பாராத இடத்திலும், எதிர் பாராத நேரத்திலும் வருகிறதாயிருக்கிறது. ஆனால், நீங்கள் அதை வெறுமனே விசுவாசிக்கும் போது தேவன் தன்னுடைய சொந்த வழியில் பதில் கொடுக்கிறவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டபிறகு, பின் வாங்கிப் போகக் கூடாது. அதிலே தரித்திருங்கள். அதை நீங்கள் உறுதியாக பிடித்துக்கொண்டு இப்படியாக சொல்ல வேண்டும். “இதுதான் காரியம். தேவன் அதை உரைத்திருக்கிறார். அது காரியத்தை முடிவுக்கு கொண்டு வருகிறதாயிருக்கிறது. தேவன் அதை சொல்லியிருக்கும் போது அது எவ்வளவு காலமானாலும் அது முடிவடைந்ததாக இருக்கிறது”. அவர் உலகம் உண்டாகக் கடவது என்று சொன்னபோது, ஒரு மூலக்கூறு கூட உருவாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர், அவர் நித்தியமானவர். அதற்கு பிறகு கொஞ்சகாலம் கழித்து மூலக்கூறுகளும், அனுக்களும் உருவாகிற்று.அது அங்கே உண்டானது, ஏனெனில் ''உண்டாகக்கடவது“ என்று அப்படியாக அவர் கூறினார். 25இங்கே நாம் சிந்திக்கக் கூடிய ஒரு வாக்குத்தத்தம் இருக்கிறது. வார்த்தையை உரைத்த அவர் தாமே, ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றியிருப்பாரானால், ''கறை திரையில்லாத ஒரு சபையையும் தமக்கு முன்பாக அவர் பெற்றுக் கொள்வார் என்பது நிச்சயம். “சகோதரனே, சகோதரியே நாம் தேவனோடு சரியாக இருக்கிறோம் என்ற நிச்சயம் அவசியமாய் இருக்கிறது. ஏனென்றால் ஒரு சபையானது தோன்றப் போகிறது. நாம் அந்த சபையிலே ஒரு பாகமாக இருக்கப் போகிறோம். இப்பூமியில் என்ன நிகழ்ந்தாலும் அது காரியமல்ல, ஏனென்றால் நாம் தாமே தேவன் கட்டி உண்டாக்கின நகரத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எவ்விதத்திலும் அதை இழந்து போகக் கூடாது. நீங்கள் எதைச் செய்தாலும் அதை மட்டும் மறவாதீர்கள். உங்கள் பக்கத்து வீட்டார் என்ன செய்கிறார் என்றும், மற்ற நபர் என்ன செய்கிறார் என்றும், உங்கள் சகமாணவர் என்ன செய்கிறார் என்றும் அல்லது உங்கள் கணவனோ, உங்கள் மனைவியோ அல்லது வேறு யாரோ என்ன செய்கிறார்கள் என்பதும் காரியம் அல்ல. அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட காரியம். நீங்கள், நீங்கள்தான் அந்த இரட்சிப்பைக் கட்டயமாகத் தேட வேண்டும். உங்கள் தகப்பனார் ஒரு பெரிய மனிதராய் இருந்திருக்கலாம் அல்லது உங்கள் தாயார்; பெரிய நபராக இருந்திருக்கலாம், ஆனால் உன்னைக் குறித்து காரியம் என்ன? பாருங்கள்‚ அது உன்னைக் குறித்ததாயிருக்கிறது. அதை தனக்கே உரியதாக நீ பெற்றே ஆக வேண்டும். சரிதானே. 26இப்பொழுது, ''நீங்கள் பிதாவினிடத்தில் எதையாகிலும் என் நாமத்திலே கேட்கும்போது, நான் அதை செய்வேன்“ என்று இயேசு கூறினார். இப்பொழுது, ''நான் அதை செய்வேன்” என்பது அதுதாமே நேரிடையாக அவரிடத்திலிருந்து வருகிறதாயிருக்கிறது. அது, “நீங்கள் விசுவாசத்துடன் கேட்கும் போது” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கிறது. இப்பொழுது, மாற்கு 11:22-ல் ''நீங்கள் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும், என்று இயேசு கூறினதை நாம் காண்கிறோம்“. பாருங்கள்‚ இப்பொழுது, காரியம் என்னவெனில் நீங்கள் வெறுமனே வெளியே சென்று, ''மலையே தள்ளுண்டுபோ“ என்று சொல்லமுடியாது. நீங்கள் அதை செய்வதற்கான ஒரு நோக்கமும், குறிக்கோளும் உடையவர்களாய் இருக்கவேண்டும். முதலாவது அது தேவனுடைய சித்தமா என்று அறிந்து கொள்ளவேண்டும். பின்பு உங்களுடைய நோக்கமும், குறிக்கோளும் தேவனுடைய சித்தத்தின்படி இருக்கவேண்டும். அதன் பிறகு நீங்கள் அந்த மலையினிடத்தில் பேசி, அங்கே தரித்திருங்கள். பாருங்கள், அங்கே சரியான நிலைமையை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், நிச்சயமாக அது தள்ளுண்டுபோகும். ஆனால் காரியம் என்னவெனில் நீங்கள் ”சரியான நிலைமையை“ பெற்றிருக்கவேண்டும். 27இப்பொழுது நீங்கள் இதை நினைவு கூறவேண்டும், அதென்னவெனில் தேவன் பதிலளிக்கும் போது சில சமயங்களில் அது எதிர்பாராத வழியில் இருக்கும். அவர் மாறாதவர், ஆனால் அவர் காரியங்களை எதிர்பாராத வழிகளில் கிரியை செய்கிறார். இப்பொழுது நாம் தொடர்ந்து செல்வதற்கு முன் அதைப் பற்றினதான ஒன்று அல்லது இரண்டு காரியங்களை நாம் பார்ப்போம். நாம் மோசேயைக் குறித்து தியானிப்போம். நான் மோசேயைக் குறித்து தியானிப்பதை விரும்புகிறேன். தேவனுடைய வல்லமையினால் நமக்கு பழைய ஏற்பாட்டை கொண்டு வந்த வீரமுள்ள மனிதன் அவன். அநேக முறை சந்தேகக்காரர்கள் இப்படியாக கூறுகிறார்கள், ''இப்பொழுது, அதை (பழைய ஏற்பாடு) மோசே எழுதினபடியால் அது சரியானது தான் என்று நமக்கு எப்படி தெரியும். சரி நீங்கள் பின்னாகப் போய் அது உண்மைதான் என்று நிரூபிக்கலாம். இப்பொழுது ஒருவன் இதுவரை என்ன நடந்தது என்றும், என்ன நடக்க போகிறதென்றும், அவனுக்கு அடுத்ததாக என்ன நேரிடப் போகிறதென்றும் சொல்லி அது நிறைவேறுமானால், அது உண்மை என்று நான் விசுவாசிப்பேன். பாருங்கள்‚ இது இவ்விதமாக இருக்கிறது. எப்படியெனில் நீங்கள் இங்கே சபையில் நின்று கொண்டிருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய ஜீவியத்தினூடாக சென்று நீங்கள் செய்த காரியத்தை கூறுவாரானால் அது உண்மையா, பொய்யா என்று உங்களுக்குத் தான் தெரியும். சரி, நீங்கள் அது உண்மை தான் என்று அறிவீர்களானால், அதன் பின்னர் அவர் உங்களிடத்தில் எதை கூறுகிறாரோ அதுவும் நிச்சயமாக நிறைவேறும் என்று நீங்கள் விசுவாசிக்க முடியும், ஏனெனில், ''இது (நிறைவேறினது) அதற்கு (நிறைவேறப் போகிறதற்கு) சாட்சி பகர்கிறதாய் இருக்கிறது“. பாருங்கள்‚ அது உண்மை. 28எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட சாட்சிகளையும், இன்னும் வேதத்தில் அநேக இடங்களில் தேவனுடைய வாக்குத்தத்தத்தோடு கூட தரித்திருந்து நின்றவர்களே விசுவாச வீரர்கள் என்பதை நாம் காண்கிறோம். யார் என்ன சொன்னபோதும் அங்கேயே தரித்து நில்லுங்கள்; தம்முடைய நல்ல நேரத்தில் தேவன் அதை உங்களுக்கு அருளுவார். இப்பொழுது, மோசே எகிப்துக்குச் சென்றான் அல்லது சரியாக அங்கே எகிப்தில் இருந்தான். அவன் அங்கு தான் பிறந்தான். அவனுடைய பெற்றோர்கள் அவன் அந்த நேரத்திற்கு ஏற்ற சரியான குழந்தை என்பதை அறிந்து கொண்டார்கள். எனவே அவர்கள் ராஜாவின் கட்டளைக்கு பயப்படாதிருந்தார்கள். அதன் பின்பு மோசே அவனுடைய தாயாரால் போதிக்கப்பட்டிருந்தான். என்னே ஒரு நல்ல உபாத்தியாயர்‚ அவனுடைய சொந்த தாயார் அவனுக்கு இப்படிப்பட்ட கதைகளை போதிப்பார்கள். ''மோசே, நீ என்னுடைய குமாரன் ஆனால் நீ ஒரு நோக்கத்திற்காக பிறந்தவன். இஸ்ரவேலை விடுவிப்பதற்காக, ஏதோ ஒருநாளில் தேவன் உன்னை உபயோகிப்பார்“. 29அவனுடைய விலையேறப்பெற்ற தாய் மரித்தபிறகு, சிறந்த ஆட்சியாளராக பார்வோனுக்கு அடுத்த படியாக சிங்காசனத்திற்கு வாரிசாக இருந்தான் என்று நினைக்கிறேன். பிறகு ஒரு நாள் அவனுக்கு தன்னுடைய சகோதரர்களை குறித்ததான உணர்வு வந்தது. சில நேரங்களில் ஏதாவது காரியத்தை குறித்த உணர்வானது, அதை நாம் பெற்றிருந்த போதிலும், அதை சரியாக செய்து முடிப்பதற்கு நாம் தேவனுடைய வழியின்படி செய்ய வேண்டியதாயிருக்கிறது. நிச்சயமாக. தேவன் நிச்சயமாகவே பசியுள்ளவர்கள், உபத்திரவப்படுகிறவர்கள் மேல் இரக்கமாய் இருக்கிறார் மற்றும் பசியுள்ளவர்களை போஷிக்கவும் ஏனைய காரியங்களை செய்வதற்கு நம்மிடத்தில் எல்லாவிதமான அமைப்புகள் இருக்கிறது. அது அருமையான காரியம் என்று நான் நம்புகிறேன். இருந்த போதிலும் சுவிசேஷம் தான் உண்மையான பணியாக இருக்கிறது. சுவிசேஷம், அதை கொண்டு செல்வது... அது தான் உண்மையான பணி. 30அதன் பிறகு, அவன் தாமே தன் சொந்த முயற்சியில் தோல்வி அடைந்தான் என்பதை இங்கே நாம் பார்க்கிறோம். காரணம், அவன் புத்திசாலியும், இராணுவ வீரனாகவும் இருந்தான். அவன் அப்படிப்பட்டவனாக இருந்தான். அவன் தோல்வியை சந்தித்தான். அதன் பிறகு அவன் தன் பணியிலிருந்து விலகி ஓடி வனாந்திரத்திற்கு சென்று நாற்பது வருடங்கள் அங்கே இருந்தான். அங்கே அவனுக்கு மனைவியும், பிள்ளைகளும் அல்லது கெர்சோன் என்னும் குழந்தையைப் பெற்றுக் கொண்டான். வினோதமான காரியம் என்னவென்றால், அவனுடைய ஜீவியத்தில் தேவனுடைய அழைப்பை பெற்ற மோசே, அதிலிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தப்பிக்கவே முடியாது. இப்பொழுது இன்றிரவு நம்மத்தியில் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிற இவ்விதமான மக்கள் இருக்கலாம். அதென்னவெனில் நீங்கள் எங்கேயோ உங்கள் ஜீவியத்தினூடாக தேவனுடைய அழைப்பை உணர்ந்தும், அதற்கு செவி கொடுக்காமல் இருப்பதே. நீங்கள் அப்படிப்பட்ட ஜீவியத்திற்கு செவி கொடுக்கும்வரை, உங்கள் வாழ்நாளெல்லாம் பரிதாபமான நிலையில் இருப்பீர்கள். 31அப்படியானால் பரிசுத்த ஆவியை அநேக வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் மக்கள் இங்கே இருப்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு வேளை இப்படியாக கூறலாம், ''சரி, அதை நான் பெற்றுக் கொள்வேனா என்று எனக்கு தெரியாது... “ நல்லது, நீங்கள் ”அதை“ பெற்றுக் கொள்ளும் வரை ஒருபோதும் திருப்தியடைய மாட்டீர்கள், பாருங்கள், ஏனெனில் நீங்கள் அதற்காக பிரித்து எடுக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ''அதையே” உங்களுடைய ஜீவியத்தில் முதல் காரியமாக வைக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் சாப்பிடுகிறீர்களோ, அல்லது மறுபடியும் குடிக்கிறீர்களோ அல்லது மறுபடியும் தூங்குகிறீர்களோ அல்லது நீங்கள் எதை செய்தாலும், ''நீங்கள் அதை பெற்றே ஆக வேண்டும்“. அது சரியே. அது தான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அது தான் காரியம். சரியாக தேவனுடைய வாக்குத்தத்தத்தோடு தரித்திருங்கள். அவர் உங்களுக்கு அதை வாக்களித்துள்ளார். எனவே அதனோடு தரித்திருங்கள். தேவன் அதை நிறைவேற்றியே ஆவார், பாருங்கள்‚ இப்பொழுது, அவர் அதை எதிர்பாராத நேரத்தில் செய்யக் கூடும். ''சரி, சகோதரன் பிரான்ஹாம், நான் இன்று கடினமாக வேலை செய்திருக்கிறேன். சற்று களைப்பாகவும் உணர்கிறேன். கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களாக நான் நல்ல நிலையில் இல்லை“, என்று நீங்கள் கூறலாம். ஒருவேளை அது அந்த நேரமாக கூட இருக்க கூடும். பாருங்கள்‚ அது எப்பொழுது நடக்கும் என்று உங்களுக்கு தெரியாது. நான் தேவனை தேட காடுகளுக்கு செல்லும் போது முட்புதர்கள் என்னை கீறினதையும், பறவைகள் என்னை எரிச்சலூட்டினதையும், கொசுக்கள் என்னை கடித்ததையும் நானும் கூட எத்தனையோ முறை நிறுத்தி, அநேக நாட்களுக்கு அந்த அனுபவங்களை கூறலாம். சரியாக அப்படிப்பட்ட சமயத்தில் தான் தேவன் ஏதோ காரியத்தை செய்ய இருக்கிறார். காரியங்கள் எதுவும் எதிர்பாராததாக காணப்படும் அந்த சமயத்தில் தான் தேவன் காரியங்களை தன் கட்டுக்குள் எடுத்துக் கொள்வார். 32இப்பொழுது மோசேயை கவனியுங்கள். இந்த மிகவும் வயது சென்ற ஆடு மேய்க்கிற மோசேவுக்கு ஏற்கனவே எண்பது வயதாகிவிட்டது. அவன் தேவனுக்காக நிற்க வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்னர் அவன் நாற்பது வயதை கடந்தவனாயிருந்தான். பின்பு அவன் நாற்பது வருடங்களாய் அங்கே வனாந்திரத்திலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் என்று யூகிக்கிறேன். அவனுக்கு வயதாகிக் கொண்டே போனது, அவனுடைய தாடி நரைத்ததாயும், காற்றில் பறந்து கொண்டிருந்த நீண்ட நரைத்த முடி உடையவனாயும் அவன் இருந்திருக்கக் கூடும். அவன் சபையில் இல்லாமல், இங்கே இந்த ஓரேப் மலையின் கீழாக இருந்தான். தேவன் ஒரு பிரசங்கத்தின் மூலமாக அங்கே வரவில்லை. ஆனால் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத வழியில் எரிகின்ற முட்புதரில் கீழே இறங்கி வந்தார். ஒரு கோலையோ அல்லது பட்டயத்தையோ அல்லது வேறு எதையோ கொண்டு அந்த எகிப்தியனைக் கொன்ற போதே தேவன் அவனைச் சந்திக்கக் கூடும் என்று நினைத்தான். தேவன் அவனை சபையில் கூட சந்திக்கவில்லை, ஆனால் மலைக்கு கீழே அவனை சந்தித்தார். தேவன் துதிப் பாடல்களில் அவனை சந்திக்கவில்லை, ஆனால் எரிகிற முட்புதரில் சந்தித்தார். தேவன் அவனை வாலிபனாய் இருக்கும் போது சந்திக்கவில்லை. ஆனால் வயதானவனாய் இருக்கும்போது சந்தித்தார். எண்பது வயதை கடந்த போது அவனை அழைத்தார். 33இதை நினைவில் கொள்ளுங்கள். சில சமயம் முப்பத்தைந்து அல்லது நாற்பது வயது ஆனதும் அல்லது நீங்கள் எதுவாயிருந்தாலும் நாம் வயதாகிவிட்டதாக நினைக்கிறோம். உங்களுக்கு அவ்வளவு வயதாகவில்லை. உங்களிடத்தில் என்றென்றைக்கும் ஜீவிக்கப்போகிற ஆத்துமா இருக்கிறது. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள், அது எப்பொழுதும் இவ்விதமாகத்தான் இருக்கிறது. அதென்னவெனில் அவர் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில், எதிர்பாராத இடத்தில் கிரியை செய்கிற மாறாத தேவனாயிருக்கிறார். நாம் இப்பொழுது யாக்கோபை பார்ப்போம்.அவன் தப்பி ஓடிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு நெருப்புகளுக்கு, (ஆபத்துகளுக்கு) இடையில் மாட்டிக் கொண்டான். அவன் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி போய்க் கொண்டிருந்தான். அவனுடைய மாமனார் லாபான் இந்த பக்கத்திலிருந்து அவனை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அவனுடைய (யாக்கோபின்) மனைவி அவர்களுடைய தேவர்களை திருடிக் கொண்டு வந்துவிட்டாள். மேலும் அவனால் (யாக்கோபு) ஏமாற்றப்பட்ட அவனுடைய சகோதரன் ஏசா இந்த பக்கத்திலிருந்து அவனை பின் தொடர்ந்து வருகிறதை அறிந்துக்கொண்டான். இப்பொழுது தேவன் அவனை சந்திப்பாரென்பது எதிர்பாராத நேரமாய் இருந்தது. இந்த பக்கத்திலிருந்து லாபான் வந்துக் கொண்டிருந்தான், மறுபக்கத்திலிருந்து ஏசா வந்துக் கொண்டிருந்தான். ஆனால் யாக்கோபோ அந்த சிறு ஓடையைக் கடந்து தன்னுடைய வேலையில் இறங்கினான். அவன் தாமே அந்த அசலான காரியத்தை தன் வாழ் நாளில் முதன் முறையாக பற்றிப் பிடித்திருக்கலாம், ஆனால் அவனோ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும்வரை அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டான். 34அது நம்மெல்லாருக்கும் ஒரு பெரிய பாடமாக இருக்கிறது. அசலான ஒரு காரியத்தை நீங்கள் பிடித்துக் கொள்ளும் போது, அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிடியை தளர்ந்து போக விடாதீர்கள். எத்தனை முறை சூரியன் உங்களை கடந்து போனாலும் அல்லது எது நிகழ்ந்தாலும், எத்தனை முறை பசி வேதனை வந்தாலும், மேலும் எது நிகழ்ந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படும் வரைக்கும், அந்த வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவன் தன் மனைவியையும், எல்லோரையும் தன்னை விட்டு விலக்கி, அவன் தாமே தனியே சென்று அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். ஏனெனில் அவன் இரண்டு நெருப்புகளுக்கு இடையே சிக்கிக் கொண்டான். எதிர்பாராத வழியில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் தேவன் அவனை சந்தித்தார். அங்கே தான் தேவன் அவனை சந்தித்தார். 35வாலிபனாகிய ஏசாயா தீர்க்கதரிசி அந்த நல்ல ராஜாவின் மேல் சார்ந்திருந்தான். அவன் ஒரு நல்ல மனிதனும் கூட. அவனுடைய வாழ்கையில் காரியங்கள் யாவும் சுலபமாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளில் அந்த ராஜா மரித்துப் போனான். பின்பு ஏசாயா தேவனுடைய ஆலயத்தில் உள்ள பலிபீடத்தண்டையில் சென்று, அங்கே அவன் ஜெபித்துக் கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய சொந்த பாவங்களுக்கும் அந்த தரிசனத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டான். அங்கே தூதர்கள் தங்கள் சிறகுகளால் முகத்தைமூடி, தங்கள் சிறகுகளால் பாதத்தை மூடி பறந்துக் கொண்டு கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம் என்று சத்தமிடுவதை பார்த்தபோது அவன் ''எனக்கு ஐயோ“ என்று அலறினான். ''எனக்கு ஐயோ, நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன்” என்று சத்தமிட்டான். அவன் தாமே எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் பிடிபட்டான். மேலும், ''மக்கள் என்னை ஒரு நல்ல பிரசங்கி என்றும் அல்லது அது போல ஏதோ ஒருவர் என்றும் விசுவாசிப்பதால்“, நான் சென்று என் ஜெபத்தை ஏறெடுத்து மறுபடியும் எழும்பி தொடர்ந்து போவேன் என்று அவன் நினைத்தான். ஆனால் அங்கே அவன் பிடிக்கப்பட்டான். அவன் தாமே தரிசனத்தில் இந்நிலையில் பிடிக்கப்பட்டதும் அல்லாமல், அவன் ஜீவனுள்ள தேவனுடைய வீட்டில் அசுத்த உதடுள்ளவனாகப்; பிடிக்கப்பட்டான். ஓ, சகோதரனே, அதுதாமே “தெய்வீக சுகமளித்தல் இல்லை என்றும்; பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் இல்லை என்றும் பிரசங்கிக்கிற ஊழியக்காரர்கள் உள்ள இந்த பட்டணத்தில் இந்த இரவும், நாளை காலையும் தேடிப் பார்க்குமானால்; ''எனக்கு ஐயோ, நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன்,” என்று கூக்குரலிடும் சிலர் அங்கே இருக்கக் கூடும்; அது உண்மையே. ஆமாம், அது மிகவும் உண்மையே. 36இப்பொழுது, அந்த எபிரெய பிள்ளைகளும் அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் பிடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தேவனை சந்தித்த அந்த அக்கினி சூளையில், தேவன் அவர்களிடத்தில் வருவார் என்று எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வழியில் பிடிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தேவன் மாறாதவர், அந்த மாறாத தேவன் காரியங்களை அந்த வழியில் தான் செய்கிறார்; அது தாமே எதிர்பாராத இடத்திலும், எதிர்பாராத நேரத்திலும் இன்னும் அது போன்று இருக்கிறது. 37இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு பலமுள்ள ராஜா வேண்டுமென்று கேட்டார்கள். அவர்களை விடுவிக்கக் கூடிய ஒரு ராஜா வேண்டுமென்று இருந்தார்கள். தாவீதைப் போல் தைரியமாய் செல்லக்கூடிய ஒரு பலமுள்ள ராஜாவையும், தங்களை விடுவிக்கக்கூடிய ஒரு ராஜாவையும் தேவன் அவர்களிடத்தில் அனுப்புவார் என்று அவரை எதிர்பார்த்திருந்தார்கள். எப்படியெனில், ''தாவீதின் குமாரன் எழும்பி பரலோகத்தின் பாதையினூடாய் கீழே வந்து, தூதர்களின் முழு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பூமியில் தன் பாதத்தை பதித்து நடந்து வருவதை பரலோகத்திலிருக்கிற பிதாவானவர் உற்று நோக்கி,“ இதோ ''இப்பொழுது நான் உங்களிடத்திற்கு மேசியாவை அனுப்புகிறேன்”, என்பார். அவர் அவ்விதமாகத்தான் வரக்கூடும் என்று மனதில் கொண்டிருந்தார்கள். ''ஆனால் அவர்கள் பெற்றுக் கொண்டது என்ன“? மகத்தான ராஜாவிற்கு பதிலாக ஒரு குழந்தையை பெற்றிருந்தார்கள். மலைப் பகுதியில், சிறிய குகையில் வைக்கோல்களும் மற்றும் விலங்குகளின் கழிவுப் பொருள் நிரம்பின ஒரு சிறிய தொழுவத்தில் குழந்தையாக பிறந்திருந்தார். அது அவர்களுடைய ஜெபத்தின் பதிலாக இருந்தது. சரியாக அவர்தான் அவர்களுடைய தேவையாய் இருந்தார். ஆனால் அதை அவர்கள் தாங்கள் நினைத்த வழியில் வரவேண்டும் என்று எண்ணினார்கள். அவர்கள் நினைத்த வழியே மிகவும் சிறந்தது என்று எண்ணி, அந்த வழியாய் வரவேண்டும் என்று இருந்தார்கள். ஆனால் தேவன் எது சிறந்தது என்று அறிந்திருக்கிறார். அவர் எது சிறந்தது என்று அறிந்திருக்கிறாரோ அந்த வழியில் தான் அதைச் செய்வார். மேலும்அவர் எப்படி அனுப்ப வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார், ஏனெனில் அவர் முடிவில்லாத தேவன். 38''அவர் உங்களுடைய தேவைகளை அறிந்திருக்கிறார்“;. அதை எப்படி உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆனால் தொல்லை என்னவென்றால், அந்த காரியம் வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தபடி வராததால் நீங்கள் ஏமாற்றமடைந்து அதை அவரிடத்தில் திரும்பவும் கொடுத்து விடுகிறீர்கள். அவர் எந்த வழியில் அதை கொடுக்க விரும்புகிறாரோ அவ்விதமாக அவர் கொடுக்கட்டும் என்று கேட்டு விசுவாசிப்போமாக. அவர் எந்த அடிப்படையில் கொடுக்கிறாரோ அவ்விதமாக அதை நாம் ஏற்றுக் கொள்ளட்டும். அதுதான் சரி. நீங்கள் அவரிடத்தில் (எதையாவது) கேட்பீர்களானால், அவரை பொய்யர் ஆக்காதீர்கள். அவர் பொய் சொல்வதில்லை. ''என்னுடைய நாமத்தினாலே பிதாவினிடத்தில் எதையாவது கேட்டால், அதை நான் உங்களுக்கு கொடுப்பேன்“ என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இப்பொழுது தேவன் பொய் சொல்வதில்லை. அவரிடத்தில் கேட்கும் போது அது உங்களுக்கு கொடுக்கப்படும். ''தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும்”, என்பதை நாம் விசுவாசிக்கிறோம். நிச்சயமாக அதை நாம் விசுவாசிக்கிறோம். 39அது ஒரு தொழுவமாக இருந்தது, எனவே அவர்கள் என்ன செய்தார்கள்? இந்த சிறு குழந்தை தொழுவத்தில் பிறந்திருக்கிறது, இவரா அந்த மகத்தான ராஜா? என்று கூறி அவர்கள் அவரை நிராகரித்தார்கள். ஆம், ஐயா. ஏன்? அவர், அவர்கள் எதிர்பார்த்தவழியில்; அவர் வராததே. நண்பர்களே, அது ஒரு பயங்கரமான காரியம் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அது சரிதான். ஆனால், நாமும் அதே காரியத்தில் குற்றவாளிகளாயிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நாமும் அதே விதமாக குற்றவாளியாயிருக்கிறோம். நாம் தேவனிடத்தில் காரியங்களை கேட்டு கடந்து போய்விடுகிறோம். பின்பு நாம் நினைத்த மாதிரி தேவன் அந்த காரியத்தை நம்மீது பொழியாத போதும், கொடுக்காத போதும் நாம் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறோம். பாருங்கள்? அப்படி செய்யாதீர்கள். அவரிடத்தில் கேட்டு அதோடு தரித்திருங்கள். ஆம் ஐயா. அது உண்மை என்று தெரிந்து கொண்டபோது அதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ளுங்கள். 40தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் உண்மையானது எது? ''தேவனுடைய வார்த்தை மாம்சமாகி நம்மத்தியில் கிறிஸ்துவில் வாசம் செய்தது“, கிறிஸ்து பரிசுத்த ஆவியை அனுப்பினார். அவர் தாமே ஆவியின் ரூபத்தில் உள்ள தேவனாயிருக்கிறார். எனவே அவரை உறுதியாய் பிடித்துக் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கே இருந்து நமக்கு அந்த வாக்குத்தத்தத்தை கொடுத்திருப்பாரானால், அதோடு தரித்திருங்கள். பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறோம் என்று சொல்லுகிற பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம் தேவனை அவ்வளவாக நம்புவதற்கு பயப்படுகிற காரியம் தான் என்ன? என்ன தான் காரியம்? நாம் அதை வேறு வழியில் எதிர் பார்த்ததுதான். அதைதான் நாமும் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நான் உங்களுக்கு உண்மையை சொல்லட்டும். எப்படியெனில் தேவன் நம்மிடத்தில் வந்து நம்மை இவ்விதமாகவும், அவ்விதமாகவும் உள்ள ஒரு பெரிய ஸ்தாபனமாக வளரச் செய்ய வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அப்படியாக நீங்கள் வளரும்போது நீங்கள் இன்னொருவருக்கு எதிராக பிரிவினையைத் தான் வளர்ப்பீர்கள். சகோதரனே, நாம் செய்யவேண்டிய காரியம் என்னவெனில், அப்படி செய்வதைக் குறித்து நாம் மறந்துவிட வேண்டும். உங்கள் ஸ்தாபனங்கள் மிகவும் அருமையானதுதான். ஆனால், இருதயத்தில்; இரட்சிப்பை பெற்ற மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஒருவரை ஒருவர் நேசித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்யத்தக்கதாக கரங்களை நீட்டி, ஒருவருக்கொருவர் மகிமையான உணர்வுகளையும், நம்பிக்கையான உணர்வுகளையும், சகோதர சிநேகத்தையும் பெற்றவர்களே நமக்கு தேவையாய் இருக்கிறது. ''அதுதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது“. அவ்விதமாகத்தான நாம் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவரே முடிவற்ற தேவன்.அவர் மாறுவதில்லை. அவருடைய வார்த்தைகளை அவர் மாற்றுவதில்லை. 41இப்பொழுது கவனியுங்கள். எனவே அவர்தாமே தாங்கள் எதிர்பார்த்தவழியில் வராததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவரோ வார்த்தையின் ரூபத்தில் வந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம். அவர் வேத வார்த்தை திட்டமிட்டபடி சரியாக வந்தார். அவைகள் ஒவ்வொன்றும் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான வழியில் நிறைவேறினது.தேவன் எப்பொழுதும் அதை தன்னுடைய வழியில் செய்கிறார். அதுவே சரியான வழியாக இருக்கிறது. 42இப்பொழுது மோசே, அவன் ஏன் சந்தேகப்படவேண்டும்? அவன் பிறப்பிலேயே அழைக்கப்பட்டிருந்தான். தேவன், அவனை அழைக்கும்பொழுது அவன் குழந்தையாக இருந்தான். அவன் இந்த உலகத்தில் ஒரு நோக்கத்திற்காகவே பிறந்தான். அவன் பிறப்பிலேயே ஒரு தீர்க்கதரிசி. அது எதிர்பாராதது என்று மோசே நினைப்பதற்கு அது ஒரு கடினமான காரியமாக அவனுக்கு இல்லை, ஏனெனில் தேவன் தன்னை அழைக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். யாக்கோபு, தேவன் அவனிடத்தில் அப்பொழுதுதான் பேசியிருந்தார், “யாக்கோபே உன் தேசத்திற்கு திரும்பி போ, நான்உன்னோடிருந்து, உன்னை பெருகப்பண்ணுவேன், உன்னுடைய சந்ததியை கடலின் மணலைப் போல் பெருகப்பண்ணுவேன்” என்றார். அப்படியிருக்க அந்த இரவில்; லாபான் ஒரு பக்கமும் வந்து, இன்னொரு பக்கம் ஏசாவும் வந்துகொண்டிருக்க, ஏன் அதிகமாய் அவன் எதிர்பாராதவனாயிருந்தும் தேவன் அவனை சந்தித்தார். இருப்பினும் தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் செய்தார். ஆமென். நண்பர்களே, அது தான் காரியம். 43தேவன் வாக்குத்தத்தம் பண்ணி எதிர்ப்புகள் எழும்பும்போது அதுதாமே நீ உண்மையிலேயே வார்த்தையை ஏற்றுக் கொண்டாயா? இல்லையா? என்பதை சோதிக்கவே வருகிறதாயிருக்கிறது. அசலான தங்கத்தைப் பெற்ற மனிதன் அதனுடைய தரத்தை சோதிக்க உரசும் கல்லை உபயோகிக்க தயங்கமாட்டான். பாருங்கள்‚ அது உண்மையே. “இந்த சோதனைகள் வரும்போது நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்று சோதிக்கவும், புடமிடவும் அது வருகிறதாய் இருக்கிறது என்று பேதுரு சொன்னதாக நம்புகிறேன். அது உண்மையே. நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்ற பின், உன் புருஷன் உன்னை வீட்டை விட்டு துரத்தலாம் அல்லது தாயார் உன்னை வீட்டை விட்டு துரத்தலாம் இன்னும் அது போன்ற காரியங்கள் நேரிடும்போது அதை கைவிட்டு உலகத்திற்கு மறுபடியும் திரும்பி ஓடவேண்டாம். அது ஒரு சோதனையின் நேரம் மட்டுமே‚ 44யாக்கோபு, அவன் அதைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அவன் இங்கும் அங்குமாக ஓடி இன்னும் அது போன்ற காரியங்களில் ஈடுபட்டு தன் பெரும்பாலான ஜீவியத்தை வீணடித்தான். அங்கே அவன் கூறினதை நான் விரும்புகிறேன். ''நான் இந்த ஒரு கோலை உடையவனாய் யோர்தானைக் கடந்து சென்றேன். ஆனால் இப்பொழுது நான் இரண்டு சேனைகளாக மிகவும் பலுகிப் பெருகி திரும்பி வந்திருக்கிறேன், என்றான்“. மேலும் அவன், ”என்னுடைய சகோதரன் ஏசா இந்த பக்கத்திலிருந்தும், என்னுடைய மாமனார் அந்தப் பக்கத்திலிருந்தும் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்“, என்றான். அவன் அந்த சூழ்நிலையில் சிக்கிக் கொண்டான், ஆனால் அவனோ சரியான இடத்திற்கு சென்று எதிர்பாராத விதத்தில் பதிலை பெற்றுக் கொள்ள தொடங்கினான் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் தேவன் இறங்கி வந்த போது, அவன் அவரோடு போராடி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும் வரை உறுதியாக தேவனோடு தரித்திருந்தான். 45இந்த வழியில் பார்க்கும் போது நான் யாக்கோபை நேசிக்கிறேன். அவன் ஏதோ காரியத்தை சரியானது என்று உண்மையிலே பார்த்தபோது; அவன் அசலான ஏதோ ஒன்றின் மேல் தன் கையை வைத்தபோது; அவன் அதின் பலனை அடையும் வரை அதை உறுதியாக பிடித்துக் கொண்டான். ஓ, நாம் அப்படி செய்வோமானால்‚ சபை மட்டும் அப்படி செய்யுமானால், நீங்கள் மட்டும் அது சரி என்றும், அது தாமே தேவனுடைய வாக்குத்தத்தமும், அது தோல்வியே அடையாது என்ற நிச்சயத்தையும் பெற்றுக் கொள்வீர்களானால், அது தோல்வி அடையவே மாட்டாது. யாரோ ஒருவர் உங்களிடத்தில் வந்து, “அது வேறோரு சந்ததிக்கு என்றும், அது நமக்கு கிடையாது என்றும் சொல்லி வழி விலகச் செய்வார்களானால்,” அது தேவனுடைய வார்த்தை இல்லை. இயேசு, மாற்கு 16-ல், ''நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்றார்“, பாருங்கள்! எங்கே? எம் மட்டும்? முழு உலகத்துக்கும், சர்வ சிருஷ்டிக்கும். முழு உலகத்திலும் விசுவாசிக்கிற சர்வ சிருஷ்டிக்கும் இந்த அடையாளங்கள் பின் தொடரும். பேதுரு பெந்தெகொஸ்தே நாளில், ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றார். 46அதை நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்? இந்த சுவிசேஷமானது உலகமெங்கிலும் எருசலேம் தொடங்கி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்றார். லூக்கா 24: 49-ல், ''நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் தரித்து இருங்கள் என்றார்“. அப்போஸ்தலர் 1:8-ல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வந்த பின்பு நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்”. பரிசுத்த ஆவியானவர் அடையாளங்களும், அற்புதங்களும், பின்தொடர எல்லா இடத்திலும் சாட்சி பகர்கிறார். இதிலிருந்து நம்மால் எப்படி விலகி இருக்கமுடியும்? இது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருக்கிறதே. பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள். அவன் எப்பொழுதும் சூழ்ச்சியோடு பேசி, வேதத்தை நன்கு வாசித்தவனைப் போல் காணப்படுவான். ஆனால் அவனோ அதை (வேத வார்த்தையை) திரித்துப் போட்டு அது (வார்த்தை) கூறாத ஏதோ ஒன்றை கூறினதாகச் செய்வான். இருப்பினும், வேதம் ''பேதையும் அந்த வழியில் திசைகெட்டுப் போவதில்லை“ என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது”. வெறுமனே தேவனுடைய வாக்குதத்தத்தை பற்றிக் கொண்டு அதை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். இன்னொன்றை நீங்கள் பற்றிப் பிடித்துக்கொள்ளும் வரை இதை நீங்கள் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருங்கள். இந்த ஒன்றுக்கு பதில் கிடைத்தவுடன், இன்னொன்றை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இன்னொன்றை பிடித்துக் கொள்ளும் வரை அதையே தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். இவ்விதமாக நீங்கள் தொடர்ந்து மேலே ஏறிப் போய்க் கொண்டிருங்கள். 47நேற்று இரவு இன்னொரு சபையில் அது சகோ. அவுட்லாவின் சபையில் பாடல் குழுவினர், முதற் சுற்று மறுபிறப்பு என்று இப்படி பாடிக் கொண்டிருந்தபோது, ஒருவன் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான், இன்னொருவன் வேறு எங்கேயோ சென்றான். பிறகு சிறிது நேரம் கழித்து அவன் செவ்வாய் கிரகத்தையும் (மார்ஸ்), வியாழன் கிரகத்தையும் (ஜீபிடர்) தாண்டி, பால்வெளி மண்டலத்தையும் அடைந்து அதையும் தாண்டி போய்க் கொண்டிருந்தான். அதை நான் விரும்புகிறேன். பாருங்கள்‚ சுற்றுச் சுற்றாக தொடர்ந்து மேலே சென்றுக்கொண்டிருங்கள். 'தேவனே, நீர் என்னை இரட்சிப்பதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர்;“ என்று கூறி தேவனுடைய வாக்குத்தத்தத்தை பிடித்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிப் பிடித்து நீங்கள் இரட்சிக்கப்படும் வரை தொடர்ந்து அதிலே தரித்திருங்கள்.''பின்பு, தேவனே நீர் என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்புவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர்”. எனவே நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரை தொடர்ந்து அங்கேயே தரித்திருங்கள். நீங்கள் வியாதிப்பட்டு இருப்பீர்களானால், ''தேவனே நீர் என்னை சுகமாக்குவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர்“, எனவே நான் சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்வரை இங்கேயே தரித்திருப்பேன் என்று சொல்லுங்கள். அது தான் காரியம். ''அந்த வழியில் தான் நீங்கள் அதை செய்ய வேண்டும். அதனோடு தரித்திருங்கள்”. தேவன் முடிவில்லாதவர். அவர் மாறாதவர். அவரால் மாறமுடியாது. அவர் எதிர்பாராத வழியிலே காரியங்களை செய்கிறவர், ஆனால் அது நிறைவேறும் மட்டும் அதிலே தரித்திருங்கள். நீங்கள் தேவனிடத்தில் அவர் எப்படிச் செய்ய வேண்டும் என்று 'நீங்கள் விரும்பும் வழியில் என்ன செய்ய வேண்டும்“ என்று சொல்ல வேண்டாம். அவர் எந்த வழியில்செய்ய விரும்புகிறாரோ அந்த வழியில் அவர் செய்வார். பாருங்கள்‚ அவர் எப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் அவருக்கு சொல்லவேண்டாம். 48இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது ஏசாயா பிறப்பிலே தீர்க்கதரிசியாக பிறந்தவன் என்று அறிந்து கொண்டோம். அவன் அந்த பீடத்தண்டையில் இருந்தபோது சரியாய் தன்னுடைய கடமையின் பாதையில் இருந்தான். பாருங்கள், ஒரு தீர்க்கதரிசி தரிசனம் பார்ப்பதென்பது வினோதமான காரியம் இல்லை. ஆகவே அவன் அதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். அவன் சரியாக தன்னுடைய கடமையின் பாதையில் இருந்தான். எனவே அவன் வேத வார்த்தைக்கு புறம்பாக இல்லை, அவன் சரியாக தேவனுடைய வார்த்தையில் இருந்தான். ''உங்கள் மத்தியில் ஒருவன் ஆவிக்குரியவனாகவோ, தீர்க்கதரிசியாகவோ இருப்பானேயாகில், தேவனாகிய நான் அவனுக்கு என்னை தெரியப்படுத்துவேன். இந்த தீர்க்கதரிசி சொல்லுகிறது நிறைவேறும் என்றால், அப்பொழுது அவனுக்கு செவி கொடுங்கள். அப்படியில்லை என்றால், அவனுக்கு செவி கொடாதிருங்கள்“ என்று கர்த்தராகிய தேவன் கூறினார். எனவே நீங்கள் கவனிப்பீர்களாகில், யாக்கோபு, வேத வார்த்தையின் வரிசையில் இருந்தான், மோசே வேத வார்த்தையின் வரிசையில் இருந்தான். 49இப்பொழுது எலியாவைக் குறித்து பார்ப்போம். நான் அவனைக் குறித்து சொல்ல விரும்புகிறேன், இப்பொழுது அவன் வனாந்திரத்திற்குச் சென்று மனவாட்டத்துடன் இருந்தான். தேவன் அவனை அனுப்பி, அங்கே தூதனைக் கொண்டு போஷித்து, அவனை வனாந்திரத்திலே வைத்தார். அவன் நாற்பது நாட்கள் இரவும் பகலும் அங்கே சுற்றித் திரிந்தான். முதலாவதாக என்ன காரியம் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அவன் மேலே உள்ள தன்னுடைய குகைக்கு திரும்பினான். அங்கே, தீர்க்கதரிசி, பலத்த காற்றானது சுழற்றி அடித்து வீசுவதின் சத்தத்தை கேட்டான். பாறைகள் வெடித்து சிதறுவதின் சத்தத்தையும் மற்றும் எல்லாவற்றையும் கேட்டான். ''நல்லது, அதெல்லாம் சரிதான்,நான் கர்மேல் பர்வதத்தின் மேல் சென்றிருக்கிறேன். அவர் இடிமுழக்கம், மின்னல், மழை மூலமாக பதில் அளிக்கிறவர் என்பதை நான் அறிவேன். அதை நான் அறிவேன்“, என்று அவன் நினைத்தான்.ஆனால் தீர்க்கதரிசியின் கவனத்தை ஈர்த்தது எதுவென்றால் அது அந்த எதிர்பாராத அமர்ந்த மெல்லிய சத்தமே. அங்கேதான் பெந்தெகொஸ்தே மக்களாகிய நம்மில் அநேகர் அதை தாண்டிப் போகிறோம். பாருங்கள்‚ தேவன் தாமே காரியங்களை தன்னுடைய சொந்த வழியில் கொண்டு வரும் பொழுது, நாமோ வேறு காரியங்களை, வேறு வழியில் எதிர்பார்க்கிறோம். பாருங்கள்‚ நாம் நினைப்பது என்னவெனில், அது நாம் எதிர்பார்க்கிற வழியில் அது வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் தேவனோ தான் செய்ய விரும்பும் தன் சொந்த வழியில் அதை அனுப்புகிறார். 50இப்பொழுது நாம் இயேசுவைக் குறித்து பார்ப்போம். அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபொழுது, ஏசாயா 9 : 6-ல் “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்”. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவர் இம்மானுவேல் என்று அழைக்கப்படுவார்“ என்று அவன் கூறினான். ஏன், அவர் சரியாக வேத வார்த்தையின் வரிசையில் வந்தார். வந்தாரா? (சபையோர் ஆமென் என்கின்றனர்) சரியாக வேத வார்த்தை உரைத்தபடியே அவர் வந்தார். மோசே வார்த்தையின் வழியில் இருந்தான். ஆனால் அவன் நினைத்த வழியில் அது வரவில்லை. அவன், ''நான் அங்கே சென்று, அந்த எகிப்தியனை கொன்று போடட்டும். அது தான் வழி, அதன் பின்பு எல்லா இஸ்ரவேலர்களும் இன்னார், இன்னார், இவர்தான், இவர் தான் எங்கள் ஜெயவீரன் என்று சொல்வார்கள்“ என்று நினைத்தான். ஆனால் அது அவ்வழியில் வரவில்லை. இருப்பினும் மோசே தன்னைக் குறித்து வேத வார்த்தை என்ன உரைத்ததோ அந்த வழியில் அவன் இருந்தான். இன்னும் யாக்கோபும், மற்றெல்லாரும் தேவன் கிரியை செய்தபோது வேத வார்த்தையின் ஒழுங்கில் இருந்தார்கள். 51நாம் மட்டும் தேவனுடைய வார்த்தையின் ஒழுங்கில் வந்து அதிலே தரித்திருப்போம் என்றால்‚ சகோதரன் பிரான்ஹாம், நான் தேவனுடைய வார்த்தையின் ஒழுங்கிலே வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? வெறுமனே உங்களுடைய இருதயத்தில் அதை ஏற்றுக் கொண்டு விசுவாசியுங்கள். ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் உங்களுடையது. அது உங்களுடையது. நீங்கள் அதை பெற்றுக் கொள்ளலாம். அது உங்களுக்குச் சொந்தமானது. ''இந்த புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது“ என்று நீங்கள் பாடுகிறீர்கள். ''ஒவ்வொரு அதிகாரமும், ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு வரியும் என்னுடையது. இந்த புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது என்பதற்காக அவருடைய தெய்வீக அன்பை நான் நம்புகிறேன்”. பாருங்கள்‚. வாக்குத்தத்தம் என்னவாயிருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை, எப்படியாயினும் அது உங்களுடையதாயிருக்கிறது. ஏனெனில் தேவன் அதை உங்களுக்கு கொடுத்துவிட்டார். ''தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் பானம்பண்ணக்கடவன்“ அது உங்களுடையது. அது உங்களுக்கு சொந்தமானது. உங்களுக்கு வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய சரியான விசுவாசம் இருக்குமானால், எந்த வாக்குத்தத்தமும் உங்களுடையதாய் இருக்கிறது. நீங்கள் மட்டும் விசுவாசித்தால் போதும் அது நிச்சயம் நிறைவேறும். 52இப்பொழுது, இயேசு வந்தபோது, அவர் தொழுவத்தில் பிறந்தார் என்று நமக்கு தெரியும். எனவே யூதர்கள் அதை அறிந்த உடனே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நினைத்த வண்ணம் அவர் வராததினால், அவரை அவர்கள் வெறுமனே தங்கள் ஐக்கியத்திலிருந்து விலக்கி வைத்தார்கள். அவர் அதற்கு மேல் அவர்களுடைய ஐக்கியத்தில் இல்லை. ஆனால் அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். அவர்களுடைய செயல்கள் அவரை தடுத்து நிறுத்தவில்லை. பெந்தெகொஸ்தேவும் முதலாவது பிறந்த போது, சபையானது அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டது. அது செய்தியை நிறுத்திப் போட முடியவில்லை. அது எப்பொழுதும் போல் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ''இயேசுவை (எதுவும்) தடுத்து நிறுத்த முடியாது“. யாரால் தேவனை தடுத்து நிறுத்த முடியும்? உங்களால் அதை செய்யமுடியாது. இல்லை, அதை ஒருபோதும் உங்களால் செய்யமுடியாது. ஒருவேளை சூரியனை கூட உங்களால் சுலபமாக நிறுத்த முடியும். ஆனால் தேவனை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அவருடைய திட்டமானது தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். 53அங்கே சபைகள் எழுப்புதலுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது அதை இவ்விதமாக பெற்றுக் கொண்டார்கள். அதுதாமே அவர்கள் எதிர்பாரத வழியில் வந்தது. எப்படியெனில், இங்கே கலிபோர்னியாவில் ஒற்றைக் கண்ணுடைய ஒரு கருப்பு மனிதன் தெருவில் சுற்றித் திரியும் ஒரு ஜோடி நாடோடிகளையும், சிலரையும், இன்னும் அது போன்ற கூட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பினான். அங்கு தொடங்கப்பட்ட (எழுப்புதல்) அக்கினியானது இப்பொழுது எவ்வளவு தூரம் கடந்து சென்றிருக்கிறது கவனியுங்கள். உலகத்திலே இது தான் மிகவும் வேகமாக வளரும் சபை. கடந்தஆண்டு மற்ற எல்லா சபையார் பெற்றுக் கொண்டவர்களை சேர்த்தாலும் அதைக் காட்டிலும் அதிகமான மனமாற்றமடைந்தவர்களை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆமாம், அது சரியே. கத்தோலிக்க நாளிதழ் (Our Sunday Visitor) ''அவர் சண்டே விசிட்டர்“ அவ்விதமாய் தெரிவிக்கிறது. அவர்கள் ''பதினைந்து லட்சம்” என்று பதிவு செய்திருக்கிறார்கள். என்னே‚ தேவனுடைய வார்த்தை தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். அவருடைய மக்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;. அவர்கள் போர் வீரர்கள், ஆமென். காரணம்; ஜீவனுள்ள தேவனின் வார்த்தை அவர்களுடைய இருதயத்தில் எரிந்துக் கொண்டிருக்கிறது. அது சரியே. தேவன் அப்படிப்பட்டவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி, அவர்களை ஆசீர்வதித்து பெருகச் செய்கிறார். 54இப்பொழுது நாம் நம்முடைய சிந்தையை வார்த்தையின் மீதும், தேவன் மீதும் வைத்து தொடர்ந்து செல்லுவோம். ''நாங்கள் தான் பெரிய கூட்டமாக இருக்கப் போகிறோம் அல்லது பட்டணத்திலேயே எங்களிடத்தில் தான் சிறந்த கூட்டம் இருக்கிறது. மிகச்சிறந்த உடை அணிந்தவர்கள் எங்களுடைய இடத்திற்கு வருகிறார்கள் அல்லது இன்னும் அது போன்ற காரியங்களை பெற்றிருக்கிறோம் என்று கூறி அதை தவறவிட வேண்டாம்“. அப்படிப்பட்ட எண்ணம் உங்களுக்கு வருமானால் அப்பொழுதே நீங்கள் விழுந்து போனீர்கள். பாருங்கள்‚ ஆம், ஐயா. இதை நினைவில் கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஆவியானவர் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஜீவனுள்ள சிருஷ்டிப்புகள் இருக்கும். அது சரியே. தேவனுடைய ஆவியோடு தரித்திருங்கள். நீங்கள் என்ன செய்தாலும் அவருடைய ஆவியோடு தரித்திருங்கள். 55இப்பொழுது இயேசுவானவர் வளர்ந்தபோது, அவர்கள் எந்த மேசியா வரவேண்டும் என்று ஜெபித்தார்களோ அதே மேசியா தான் அவர் என்று அவர்களுக்கு நிரூபித்தார். அவர், மேசியாவிற்கான தனது அடையாளத்தை அவர்களுக்கு காண்பித்தார். அவர் செய்த அடையாளங்கள் மூலம் அவரே மேசியா என்று நிரூபித்துக் காண்பித்தார். கிணற்றண்டை வந்த அந்த ஸ்திரீயை கவனியுங்கள், அவர், அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்று அவளுடைய பாவங்களை அவளுக்கு சொன்னபோது, ஏன், ''ஐயா, மேசியா வரும்போது அவர் எல்லாவற்றையும் எங்களுக்கு தெரிவிப்பார் என்று கூறினாள்“, ஆனால் அவளோ அவர் யாரென்று அறியாதிருந்தாள். அவர், ''நான் தான் அவர்“ என்று கூறினார். நாத்தான்வேலை கவனியுங்கள் அவன் பிலிப்போடு இயேசுவின் சமூகத்தில் வந்தபோது, இயேசு அவன் யார் என்றும், அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்றும், முன்பு என்ன செய்து கொண்டிருந்தான் என்றும் அவனிடத்தில் சொன்னார். ஓ, என்னே‚ அது அவரை நிரூபித்தது. அவன் ''போதகரே, நீர் தேவனுடைய குமாரன்“ நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். என்னே‚ நிச்சயமாக. அதற்கு காரணம் என்ன? அவரே மேசியா என்று நிரூபித்தார். 56இஸ்ரவேலர்கள், அவர் எப்படி வரவேண்டும் என்று நினைத்தார்களோ அவ்விதமாக அவர் வரவில்லை. அவர்கள், “அவர் ஒரு மகத்தான ராஜாவாக, கையிலே கோலை எடுத்துக்கொண்டு ரோமானியர்களிடத்தில் சென்று, அவர்களை தலையில் அடித்து வீழ்த்துவார்” என்று எண்ணினார்கள். ஆனால் அது தேவனுடைய வழி அல்ல. அந்த வருகையில் அவர் அப்படி செய்யவேண்டுமென வேதவாக்கியம் சொல்லவில்லை. அவருடைய அடுத்த வருகையில் அவர் அதை செய்ய போகிறார். அவர்கள், அவருடைய முதலாம் வருகையோடு இரண்டாம் வருகையை கலந்துவிட்டார்கள். எனவே அப்பொழுது அவர் தாழ்மையும், எளிமையுமாய் கோவேறு கழுதையின் மேல் ஏறிவந்தார். அவர் பெரிய மாகாணங்கள் மத்தியில் உள்ள மிகச் சிறிய பட்டணத்திலிருந்து வந்தார். ஓ‚ அவர் எவ்விதமாய் வருவார் என்ற அவருடைய வருகையை குறித்ததான வேதவாக்கியங்கள் சரியாக நிறைவேறினது. ஆனால் அவர்களோ அதைப் பார்க்க தவறினார்கள். பாருங்கள்‚ ஆனால் அவர் மேசியாவின் அடையாளங்களை நடப்பித்து அவர் தான் அந்த மேசியா என்று நிரூபித்தார். அவர்களோ, அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் அவர்களிடத்தில் அவர்கள் எதிர்பாராத வழியில் வந்தார். 57இப்பொழுது, தேவன் அவரை எந்த அடிப்படையில் அனுப்பினாரோ அதை அவர்கள் ஏற்றுக் இந்த இரவில் பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம், தேவன் எந்த அடிப்படையில் பரிசுத்த ஆவியை அனுப்பினாரோ அந்த வழியில் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? பரிசுத்த ஆவியானவர் வரும்போது என்ன செய்வார் என்று தேவன் உரைத்தாரோ அது அந்த விதமாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாமா? அந்த அடிப்படையில் தான் நாம் ஏற்றுக் கொள்ள விரும்புகிறோமா? அல்லது, ''நான் விசுவாசித்த போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என விசுவாசிக்கிறேன்“ அல்லது ''நான் என் போதகருடைய கரங்களை குலுக்கினபோது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என விசுவாசிக்கிறேன் என்று நாம் சொல்ல விரும்புகிறோமா?” அவ்விதமாக வேதம் கூறவில்லை. ''அவர் வரும்போது, என்னைக் குறித்து அவர் சாட்சிக்கொடுப்பார்“, என்று இயேசு கூறினார் பாருங்கள்‚ அவர் வரும்போது. 58இப்பொழுது அவர் எப்படி தேவனை குறித்து சாட்சிக் கொடுக்கிறார்? அவர் உங்களுக்குள் ஜீவிக்கிற ஜீவியத்தினாலே அதைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். ''அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“. நீங்கள் இப்படி சொல்லலாம், ''நல்லது, சகோதரன் பிரான்ஹாம், நான் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன். அந்நிய பாஷையிலே பேசி இருக்கிறேன்.“ நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். ஆனால் அந்த ஜீவியம் அந்த அனுபவத்தை பின்தொடர்ந்து வரவில்லை என்றால், அங்கே ஏதோ காரியம் தவறாயிருக்கிறது, பாருங்கள்‚ நீங்கள் தவறான காரியத்தை பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அசலான பரிசுத்த ஆவியை பெற்று அந்நிய பாஷையில் பேசி இருப்பீர்களானால், அந்த ஜீவியமானது அதை பின்தொடரும். மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன் என்றும், அதின் அனுபவத்தை பெற்றிருக்கிறேன் என்றும் உரிமைகோரின பின்னர் உங்களுடைய ஜீவியம் தேவனுடைய வார்த்தையின்படி இல்லையென்றால், நீங்கள் தவறான ஆவியை பெற்றிருக்கிறீர்கள். பாருங்கள்‚ காரணம் “நீங்கள் முட்செடியிலிருந்து திராட்சை கனியைப் பெற்றுக் கொள்ளமுடியாது”. அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்‚ “அதின் கனிகளாலே அவைகள் அறியப்படும்”. 59இயேசு வந்தபோது, அவர், தான் மேசியா என்று உரிமை கோரினதும் அல்லாமல் அவர் தாமே மேசியாவின் கிரியைகளை செய்தும் காண்பித்தார். ஆமென். அவர், ''நான் என் பிதாவின் கிரியைகளை செய்யவில்லையென்றால், என்னை விசுவாசிக்க வேண்டாம். ஆனால் நான் பிதாவின் கிரியைகளை செய்வேனேயாகில், கிரியைகளை விசுவாசியுங்கள்“ என்று கூறினார். என்னே ஒரு அறிக்கை‚ எபிரேயர் 13:8-ல் வாக்குரைத்தபடி, ”இயேசு கிறிஸ்து நேற்றும்,இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்“ என்பதும், இன்றைக்கும் அதேவிதமாய் இருக்கிறது. 60ஸ்தாபனங்களும், பெரிய அமைப்புகளும் பட்டிணத்தில் எழுப்புதல் உண்டாவதை பார்த்தும், அவர்கள் இன்னும் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்?எதைத்தான் ஸ்தாபனங்கள் எதிர்பார்க்கிறது? அறிவுப்பூர்வமான சிறந்த பேச்சை பெற்ற ஒருவனை, அவன் நன்கு படித்தவனாகவும், பகட்டாக பேசுகிறவனாகவும் இருக்கவேண்டும். மேலும் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்று, இன்னும் அதுபோன்ற காரியங்களை செய்து ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கதிறன் படைத்தவனும், தனித்தன்மை வாய்ந்தவனுமாய் இருக்கவேண்டும். நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்? கிறிஸ்தவர்கள் என்றும், தங்கள் ஜீவியம் நேராக்கப்பட்டது என்றும் உரிமை கோருகிற நீங்கள் இன்னுமாக பீப்பாவில் உள்ள கோணலான (நேர்மையற்ற) பாம்புகளைப் போல் இருக்கும் சிகெரட் புகைக்கும் ஒரு கூட்ட பையன்களும், கழுவப்பட முடியாத அளவுக்கு முகத்துக்கு வர்ணம் பூசின ஒரு கூட்ட யேசபேல்களுமாய் இருந்து கொண்டு, பீடத்தண்டைக்கு ஏறி செல்கிறீர்கள். நீங்கள், அதுதான் பரிசுத்த ஆவிஎன்று என்னிடத்தில் கூறுகிறீர்களா? இல்லை, ஐயா. பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமும், இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த வல்லமையாயிருக்கிறது. வேத வார்த்தை, “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறகிறது. ஆமென், அது உண்மை, சகோதரனே, இலேசாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 61அது என்ன? அங்கே மேலே (பிரசங்க பீடம்) ஒரு மனிதனைக் கொண்டு செல்லுங்கள், ஒரு வேளை அவன் கொஞ்சம் திக்கிப் பேசுபவனும், தன் மொழியை தெளிவாக பேச முடியாதவனும், வார்த்தைகளை தவறி சொல்கிறவனும், தவறி உச்சரிக்கிறவனாய் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட ஒருவனை அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் “ஆ, அந்த மனிதனுக்கு ஒன்றும் தெரியவில்லை” என்பார்கள். சார்லஸ் ஃபின்னிக்கு பிறகு நீங்கள் பெற்றுக் கொண்ட மகத்தான நபர்களில் ஒருவரான டுவைட் மூடியைக் குறித்துஎன்ன? அது சரி, மூடியைக் குறித்து என்ன? அவர் தன் பெயரை படிக்க சிரமப்படுகிற எளிய செருப்பு செப்பனிடுபவராயிருந்தார். ஒரு நாளில் அவர் இங்கிலாந்தில் உள்ள காக்னிஸ் (லண்டன் கிழக்கு கோடியில் வசிக்கும்) மக்கள் மத்தியில் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அவர் வேத வசனத்தை படிக்க முயன்று, அதை தவறாக உச்சரித்து விட்டார். எதை? அவர் பெலிஸ்தியர்கள் என்ற வார்த்தையை ''பிலிஸ்டியர்கள்“ அல்லது ஏதோ ஒருவிதமான வார்த்தையை அவர் உச்சரித்தார். திரும்பவும் அவர் பாதி வசனத்தை வாசித்து, மறுபடியும் முயற்சித்தார். அவர் ''அந்த வார்த்தையை எழுத்துக் கூட்டி வாசிக்க நேரம் இருந்தால் நலமாய் இருக்கும் என்று நினைத்தார்”. மறுபடியும் அவரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. மறுபடியும் அதை சரியாக உச்சரிக்கத் தவறினார். 62அவர் வேதாகமத்தை மூடி வைத்தார். அவருக்கு தெரியும் அங்கு உட்கார்ந்திருக்கிற அந்த காக்னிஸ் மக்கள் அறிவு சார்ந்தவர்கள் என்று. அவர் வேதாகமத்தை மூடி, “தேவனாகிய கர்த்தாவே நீர் எந்த பாஷையில் பேச வேண்டும் என்று என்னை அனுப்பினீரோ அதே பாஷையில் பேசட்டும்” என்றார். சகோதரனே, (தன்னுடைய பிரசங்கத்தினால்) அந்த இடத்தை துண்டு துண்டாக கிழித்துப் போட்டார். அது வேலை செய்தது. அவருடைய கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது. ஒரு நாளிதழிலிருந்து, அவர் எப்படி இவ்வளவு மக்களை தன் பக்கமாக இழுக்கிறார் என்று அவரை ஆராய்ந்து பார்க்கும்படி வந்தார்கள். அவர்கள் ''ஏன் எல்லோரும் டிவைட் மூடியை பார்க்கும்படி போகிறார்கள்“ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்கள். அந்த கட்டுரையில், ''முதலாவது அவர் பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கிறார். அடுத்து அவர், தன்னுடைய மூக்கின் மூலமாக பேசுவார், அவருக்கு நல்ல பேச்சுதிறன் கிடையாது, அவருடைய இலக்கணம் ஒன்றுக்கும் உதவாத மிக மோசமானதாக இருக்கும், அவர் பார்ப்பதற்கு கோரமாக இருப்பார், அவர் வட்டமாகவும், குண்டாகவும், கன்னமீசை அவருடைய முகம் எங்கும் இருக்கும்”. ஓ, அவரை எப்படியெல்லாம் அழைக்கமுடியுமோ அப்படி அழைத்தார்கள். அவருடைய மேலாளர் வந்து ''திருவாளர் மூடி அவர்களே, இதோ இதைத்தான் செய்திதாள் உங்களை பற்றி சொல்லியிருக்கிறது என்றார்“. அது, 'திருவாளரே, ஏன் டிவைட் மூடியை எல்லோரும் பார்க்க வருகிறார்கள்? என்று சொல்லப்பட்டதை அவர் வாசித்தார். திரு. மூடி அதற்கு ஒரே வாக்கியத்தில் பதில் சொன்னார். அது, ஆ, நிச்சயமாகவே அவர்கள் வருவது தேவனை பார்க்கத்தான் என்றார். அவ்வளவு தான். நீங்கள் டிவைட் மூடியை பார்க்க வருவீர்களானால், அது வேறு ஏதோ காரியமாய் இருக்கிறது உங்களைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் ஏதோ காரியத்தை பெற்றிருக்க வேண்டும். 63சகோரனே, நீ அறிவு சார்ந்த பேச்சை கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருவாயானால்‚ அதைத் தான் நீ பெற்றுக் கொள்வாய். ஆனால் நீ பரிசுத்த ஆவியின் அசைவையும், வல்லமையையும் காண வருவாயானால், தேவனுடைய வல்லமையானது பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அதை செய்யும். அது சரிதான். நீ எதை எதிர் நோக்கி, எதை எதிர் பார்த்து வருகிறாயோ அதை பொருத்து தான் காரியம் இருக்கிறது. நான் சபைக்கு வரும்போது, இரட்சிப்பை எதிர்பார்ப்பேன், பரிசுத்தமான மக்களை எதிர்பார்ப்பேன், பாவ ஜீவியத்திலிருந்து கழுவப்பட்ட ஒரு கூட்டத்தை எதிர்பார்ப்பேன். நீங்கள் அதைத் தான் எதிர்பார்க்க வேண்டும். ஏனெனில் தேவனும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். ஆனால் பாருங்கள் நாம் வேலியை நீக்கிவிட்டோம். 64என்னுடைய வயதான மெதொடிஸ்ட் ஊழியக்கார நண்பரான சகோதரன் ஸ்பர்ஜன் இப்படியாய் பிரசங்கிப்பார். இன்னும் சொல்லப்போனால் இப்படியாக பாடுவார், அது: நாம் வேலியை நீக்கிவிட்டோம், நாம் வேலியை நீக்கிவிட்டோம். நாம் பாவத்தோடு சமரசம் செய்துக் கொண்டோம், நாம்வேலியை நீக்கி விட்டோம், செம்மறி ஆடுகள் வெளியே போய்விட்டது. ஆனால்வெள்ளாடுகள் உள்ளே எப்படி வந்தது? நாம்வேலியை நீக்கிவிட்டோம், அது தான் காரணம், வேலியைநீக்கிவிட்டோம். வார்த்தையோடு தரித்திருங்கள். அவர் தவறு செய்யாதவர். அவர் மாறாதவர், அவர் முடிவில்லாத தேவன். அவர் மாறாதவர், இந்த மாறாத தேவன், இவரே பெந்தெகொஸ்தே நாளில் வந்து அந்த வீடு முழுவதும் பலமாக வீசுகிற காற்றினால் நிரப்பினார். பிளவுண்ட அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேலாக வந்தபோது அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். இன்றைக்கும் அதே தேவனை பார்க்கவேண்டும் என்று தான் நாம் எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதைப் பொறுத்து தான் காரியம் இருக்கிறது. அவரே முடிவில்லாத தேவன், 65''நான் கர்த்தர், நான் மாறாதவர்“, அவர் மாறுவதில்லை, மாறவும் மாட்டார். அவர், அங்கே முதலாவதாக எதிர்பார்த்தவர்களிடத்தில் அதைக் கொடுத்திருப்பாரானால், அதையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவதாக எதிர்பார்க்கிறவர்களிடத்திலும் கொடுப்பார். ”அவர் தன்னை அழைக்கிற ஒவ்வொருவருக்கும் அதேவிதமாக செய்கிறார்“. அவர், ''நானே திராட்சை செடி, நீங்களோ கிளைகள்“ என்று கூறினார். ஒரு திராட்சை செடி கிளைகளை விட்டு அவை திராட்சைக் கனிகளை கொடுக்கும்போது, அதிலிருந்து அடுத்து வருகிற கிளையும் திராட்சைக் கனிகளைத்தான் கொடுக்கும். நீங்கள் ஒரு கிளையிலிருந்து பூசணிக்காய்களையும், இன்னொரு கிளையிலிருந்து தர்பூசணிகளையும், இன்னொன்றில் திராட்சை கனிகளையும் பெறமுடியாது. அப்படி பெற்றுக் கொள்ளமுடியாது. பாருங்கள், அது எதைக் காண்பிக்கிறதென்றால் அது ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. அது ஒட்டு போடப்பட்ட திராட்சை செடியாக இருக்கிறது. அது சரிதான். அல்லது, அந்த திராட்சை செடியில் வேறு ஏதோ கிளையானது ஒட்டுப் போடப்பட்டிருக்கிறது. 66ஒரு சமயம் நான் சகோதரன் ஜான் ஷெரிட் உடன் நின்றுகொண்டிருந்தேன். அவர் எலுமிச்சை வகையை சேர்ந்த (Citrus) ஒரு வகையான ஒரு மரத்தில் நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு வகையான பழங்கள் இருப்பதை காண்பித்தார். நான் அது மாதுளை மரம் என்று நினைக்கிறேன். இல்லை, நான் தவறாக கூறி இருக்கலாம். அது ஒரு ஆரஞ்சுமரத்தில்; ஆரஞ்சு, எலுமிச்சை, கிச்சிலி (tangerines), டன்ஜீலோ (tangelos), பம்ளிமாஸ் போன்ற பழங்கள் வளர்ந்து இருந்தது. நான், ''ஆனால், சகோதரன் ஜான், நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து மறுபடியும் மொட்டுக்களை விடும்போது அவை எல்லாம் ஆரஞ்சு பழங்களாக இருக்குமா?“ என்றேன். அவர் இல்லை, ஒவ்வொரு கிளையும், ஒவ்வொரு சிறு கிளையும் வெட்டப்பட்டு அந்த மரத்தில் ஒட்டுப் போடப்பட்டிருக்கிறது. அது எலுமிச்சை கிளையாக இருக்கும்போது, அது எலுமிச்சை பழங்களைத்தான் கொடுக்கும். நான், ''ஆனால் அந்த அசலான மரத்தில் இன்னொரு கிளை வளரும்போது?“ அதற்கு அவர், ''அது ஆரஞ்சு பழங்களைத் தான் கொடுக்கும்“. அது சரிதான். எனவே, சகோதரனே நம்மை நாம் ஸ்தாபனத்துக்குள்ளாக இணைத்துக் கொள்ளும்போது, அதற்கு உரியவைகளைத் தான் நாம் பெற்றுக் கொள்வோம். நாம் ஸ்தாபன கனிகளைக் கொடுப்போம். நாம் ஸ்தாபனத்துக்கு சான்றாக கனி கொடுப்போம். ஆனால் நீங்கள் திராட்சை செடியில் நிலைத்திருந்து வளருவீர்களானால், அது தாமே உங்களை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக வளரச் செய்யும், பின்பு நீங்கள் தாமே கிறிஸ்துவின் ஜீவியத்தை (கனி) ஜீவிப்பீர்கள். அது அவ்விதமாக எனக்கும், உங்களுக்கும் உதவி செய்யும். சரி, அவர்கள் ஆதியில் பெற்ற அதே அனுபவத்தை நீங்களும் பெற்றுக் கொள்வீர்கள், ஆமென். நான் அதை சத்தியம் என்று அறிந்து இருக்கிறேன். 67ஸ்தாபனங்கள் அறிவு சார்ந்தவர்களை எதிர்பார்க்கிறது. பெந்தெகொஸ்தே மக்களாகிய நம்மிடத்தில் பிரச்சனை என்னவென்றால், நாம் பலத்த காற்றை அதிகமாக எதிர்பார்த்து, அந்த மெல்லிய சத்தத்தை தவறவிடுகிறோம். வெறுமனே அதைத்தான் நாம் செய்கிறோம். பாருங்கள்‚ ஆம் ஐயா. சில சமயத்தில் அது எதிர்பாராததாயிருக்கிறது. சரி, அதற்குள் சிறிய மெல்லிய சத்தம் இல்லாத போது, அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சில சமயம் ஒரு உண்மையான பிரசங்கம் நம்மை துண்டுதுண்டாக வெட்டும், மேலும் சிறிது நம்முடைய சிறகுகளை பறக்கச் செய்யும் என்று உங்களுக்கு தெரியும். சில சமயம் அது நமக்கு கொஞ்சம் உதவி செய்யும் வகையில் இருக்கும். அது உண்மை என உங்களுக்கு தெரியும். ஆம் ஐயா, அது ஏதோ வகையில் நமக்கு உதவி செய்து, நமக்கு நன்மை செய்கிறது, அது சத்தியம். 68இப்பொழுது, எலியா பலமாக வீசுகிற காற்றின் சத்தத்தைக் கேட்டான், அங்கே வெளியே, அது தாமே தேவன் என்றும் அல்லது ஏதோ காரியம் நிகழ்கிறது என்று அவன் அறிந்திருந்தான். மேலும் அவன் மழையின் சத்தத்தையும் மற்றெல்லாவற்றையும் கேட்டான். ஆனால் அவனை எச்சரித்தது எதுவென்றால் அது அவன் கேட்ட சிறிய மெல்லிய சத்தமே. அவன், தேவன் மழை மூலமாக வருவதை பார்த்திருக்கிறான். அக்கினி மூலமாகவும் வருவதைப் பார்த்திருக்கிறான். அவன் காற்றின் சத்தத்தையும் கேட்டிருக்கிறான். அவன் மழையின் சத்தத்ததையும் கேட்டிருக்கிறான். அவன் அக்கினி மற்றும் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறான். ஆனால் அந்த சிறிய மெல்லிய சத்தம் வந்தபோது மட்டுமே அவன் எச்சரிக்கப்பட்டான். எனவே அவன் தன் முகத்துக்கு முகத்திரையிட்டு வெளியே கடந்து போனான். ஓ, சகோதரனே, அது தான் காரியம். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம் கேட்கும்படிக்கு நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனுடைய சத்தம் வருமட்டும் நாம் காத்திருக்கவேண்டும். பின்பு நாம் அதோடு வெளியே சென்று, அது உண்மை என விசுவாசிக்க வேண்டும். ஆம் ஐயா. ஆனால், இன்றைக்கு, நம் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதை இன்னுமாக நாம் இணங்கண்டுகொள்ள தவறுவோமானால் அதை குறித்து ஆச்சரியப்படுகிறேன். இன்று நம்மைப்போல் மனப்பான்மையில் இருக்கிற மக்கள் இது தான் பரிசுத்த ஆவி என்று இணங்கண்டுகொள்ள தவறமாட்டார்கள் என நான் வியக்கிறேன். 69இப்பொழுது, எனக்கு தெரியும், இங்கே சுற்றிலும் இருக்கிற சில புதியவர்களாகிய நீங்கள் தாமே ஜீவிக்க வெட்கப்படும் அளவுக்கு சில மக்கள் அப்படியாக ஜீவித்திருக்கலாம். அது உண்மையாய் இருக்கக் கூடும். ஆனால் என் சகோதரனே, சகோதரியே அவர்கள் எதை குறித்து பேசுகிறார்களோ அதை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அது சரிதான். அது உண்மை. ஆனால் நீங்கள் அதினிமித்தம் அவர்களை நிதானிக்க வேண்டாம். நான் இந்தியாவிற்கு சென்றிருந்தபோது, அங்கே ஒரு மனிதன் தன்னால் கூர் முனை கொண்ட ஆணிகள் மீது படுத்துக் கொள்ள முடியும் என்று நிரூபிக்க விரும்பினான். இன்னொருவன் நெருப்பில் நடக்க நிரூபிக்க இருந்தான். அவன், நீங்கள் கொடுக்கிற ஒரு வெள்ளி காசுக்கோ (nickel) அல்லது ஒரு பத்து சென்ட (dime) அல்லது ஒரு சென்ட் அல்லது எதுவானாலும் அதற்காக தன்னால் செய்ய முடிந்ததை எல்லாம் செய்து காண்பிக்க இருந்தான். ஆனால் கவனியுங்கள், அங்கே அவன் ஒரு மாய்மாலமான காரியத்தை செய்கிறான். ஆனால் அங்கே உள்ளே எங்கேயோ சில உத்தமமான மனிதர்கள் மிகவும் பயபக்தியோடு அதை செய்து, எங்கோ இருக்கிற கடவுளுக்கு பலி செலுத்துகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனோ ஒரு மாய்மாலமான காரியத்தை செய்கிறான். நாமும் அதே காரியத்தை பெற்றிருக்கிறோம். அது மிகவும் சரிதான். சில ஆண்களும், பெண்களும் வெறுமனே வேஷம் போட்டுக் கொண்டு, பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதாக நடிக்கிறார்கள். அந்த காரணத்தின் நிமித்தம் மற்றவர்களும் அதே வழியில் போகிறார்கள். 70அன்றொரு இரவு இதை நான் கூறிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் நான் பிரசங்கம் செய்வதற்கான உரிமம் பெற்றிருந்தேன். நான் டாக்டர் டேவிஸ் எவ்விதமாக பிரசங்கம் செய்வார் என்பதை கவனித்திருக்கிறேன். எனவே நான் முதல்முறையாக பிரசங்க பீடத்திற்கு சென்றபோது அங்கே நின்றவண்ணமாக, ''உனக்கு எப்படி பிரசங்கம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? என்று எண்ணினேன். அதற்கு நான், என்னாலும் அவரைப்போல பிரசங்கம் செய்யமுடியும்“, என்றேன். எனவே நான் அங்கே சென்று அவர் செய்தது போல, நானும் என் கரங்களை முன்னும் பின்னும் சுழற்றி, அவர் செய்தது போல நானும் மேலும் கீழும் குதித்து, ''அல்லேலூயா, தேவனுக்கு மகிமை‚ அல்லேலூயா தேவனுக்கு மகிமை‚ அல்லேலூயா தேவனுக்கு மகிமை‚“ என்று கூறி கொண்டிருந்தேன். பின்பு நான் அங்கிருந்து கீழே இறங்கினபோது முதலாவது நடந்த காரியம், அங்கிருந்த வயதான ஸ்திரீகள் எல்லோரும் என்னை சுற்றி வந்து ''ஓ பில், அது மிகவும் அருமையாய் இருந்தது‚“ என்றார்கள். 71ஆனால் வயதான, டாக்டர் டேவிஸ் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு வழக்கறிஞர் என்று உங்களுக்கு தெரியும். அவர் அப்படியாய் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடத்தில், “நான் எப்படி பிரசங்கித்தேன் டாக்டர் டேவிஸ்?” என்றுகேட்டேன். அவர், ''நான் கேட்ட பிரசங்கத்திலேயே மிகவும் மோசமானதும், வெறுக்கத்தக்கதாயும் இருக்கிறது என்றார்“. ஓ என்னே‚ அவர் கூறிய வார்த்தைகள் எனக்குள் இருந்ததையெல்லாம் வெளியேற்றி போட்டது. ''நாளை பகல்இரண்டு மணிக்கு என்னுடைய படிப்பறைக்கு வா” என்றார். நான் “சரி டாக்டர் டேவிஸ்” என்றேன். உங்களுக்கு தெரியுமா? நான் மிகவும் தாழ்த்தப்பட்டவனாக உள்ளே சென்றேன். அவர் என்னை பார்த்து, ''பில்லி, நீ என்னை ஒருபோதும் மன்னிக்கக் கூடாதுபோல் உணருவதாக யூகிக்கிறேன்“ என்றார். நான், “இல்லை, நீங்கள் எதற்காக அப்படி கூறினீர்கள் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றேன். அவர், ''நானும் முதல் முறையாக சட்டப்பயிற்சி செய்யஆரம்பித்தபோது, ஒரு வழக்கறிஞரை கவனித்தேன்“ என்றார். ஆனால் நீ என்னை அதிகமாக கவனித்தாய்அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில், நான் செய்த ஒவ்வொரு அசைவையும் நீயும் செய்ய முயற்சித்ததை கவனித்தேன்”, என்றார். அவர், “ஆனால் உனக்கு இது தெரியுமா? நான் கேட்ட பிரசங்கத்திலேயே மிகவும் மோசமான பிரசங்கம் என்று கூறினதற்கு காரணம் என்னவென்றால், நீ தேவனுடைய வார்த்தையை கொஞ்சம் கூட பிரசங்கம் செய்யாதது தான்”, என்றார். நீ வெறுமனே தொடர்ந்து அழுதுகொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும், புரியாத விதத்தில் கத்திக் கொண்டிருந்தாய். ஆனால் “நீ தேவனுடைய வார்த்தையை குறித்து ஒரு காரியத்தையும் பிரசங்கிக்கவில்லை” என்றார். 72தொடர்ந்து அவர், நானும் அங்கே வழக்கு மன்றத்துக்கு சென்று விவாகரத்து வழக்குக்காக என்னால் முடிந்தவரை வாதாட முயல்வேன். ''இதோ இந்த பரிதாபமான பெண்! பூ-ஹூ, இந்த பரிதாபமான பெண் பூ- ஹூ“ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். மேலும், கிட்டத்தட்ட என் சத்தத்தை இழந்து போகும் அளவிற்கு நான் அடித்து, கூச்சலிட்டு கொண்டிருந்ததை அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு வயதான வழக்கறிஞர் என்னை அப்படியே கிட்டத்தட்ட அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வயதான வழக்கறிஞர், “கனம் பொருந்திய நீதிபதி அவர்களே, இப்படிப்பட்ட புத்திகெட்ட காரியங்களை எவ்வளவுதான் உங்கள் நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளும்?” என்றார். பிறகு நான் அந்த வயதான வழக்கறிஞரிடம் சென்றேன். அவர், “உனக்கு விஷயம் தெரியுமா? நீ பெரிய சத்தத்தை போட்டும், இன்னும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாய். நீ அப்படி செய்தது சரிதான். ஆனால் நீ எந்த ஒரு சட்டத்தை எடுத்துக் கொண்டும் பேசவில்லை. ஒரு வழக்கை தோற்கடிக்க சட்டத்தினால் மட்டுமே முடியும்” என்றார். 73சகோதரனே, இந்த இரவில் அதைத் தான் நானும் நினைக்கிறேன். இங்கேயும் அதே விதமாகத்தான் இருக்க வேண்டும், சகோதரனே. எவ்வளவு தான் கல்வியறிவும், அறிவாற்றலும், இன்னும் அதுபோன்ற காரியங்களை நாம் பெற்றிருந்தாலும் அது காரியம் அல்ல; ஆனால் உங்களுடைய ஜீவியத்தை நேராக்கி, இயேசு கிறிஸ்து ஜீவித்த அதே ஜீவியத்தையும், கிரியையும் நடப்பிக்க செய்யும் தேவனை நிரூபிக்கக்கூடிய பரிசுத்த ஆவியின் வல்லமையும், செயலாக்கமும் அவசியமாயிருக்கிறது. ஆமென். 74கடைசி நாட்களில், ''சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்“ என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது”. தீர்க்கதரிசி அதை வாக்களித்திருக்கிறார். புவியியல் ரீதியாக வெளிச்சமானது கிழக்கிலே தோன்றி மேற்கிலே மறையும். கிழக்கிலே தோன்றுகிற அதே சூரியன் தான் மேற்கிலே மறையும். அது உண்மை என்று நாம் அறிவோம். இப்பொழுது, நாகரிகம் எங்கிருந்து துவங்கினது? கிழக்கிலிருந்து. அது சரிதான். அது சூரியன் உதிக்கிற திசையிலிருந்து துவங்கி இப்பொழுது மேற்கு கடற்கரை வந்திருக்கிறது. அது அங்கிருந்து (மேற்கிலிருந்து) தொடர்ந்து போகும்போது மறுபடியும் அது கிழக்கிற்கே வந்து சேரும். நாகரிகமானது கிழக்கிலிருந்து மேற்கிற்கு வந்திருக்கிறது. இதை ஒரு நிமிடம் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 75இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ''ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல இரவுமல்ல; அது மப்பும் மந்தாரமான நாள். ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்“. இப்பொழுது கவனியுங்கள். ''அது சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் என்பதே”. இப்பொழுது தேவனுடைய குமாரன் தன்னுடைய நீதியையும், வல்லமையையும் ஏறத்தாழ ஆயிரத்துத்தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன் கிழக்கத்திய மக்கள் மீது பிரகாசிக்கச் செய்தார். அதன் பின் வந்த கால அளவில் நாம் அறிவு சார்ந்த போதனைகளைக் பெற்றுக்கொண்டோம். நமக்கு ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டோம். நாம் அதிகமான கிரியைகளை செய்தோம். அது அருமையாயிருக்கிறது. அது வெறுமனே ஒரு மந்தாரமான (dismal) நாள் மட்டுமே. அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் பீனிக்ஸில் பெற்றுக் கொள்ளவில்லை என்று நான் யூகிக்கிறேன், ஆனால் கிழக்கிலே நாங்கள் அதை பார்த்திருக்கிறோம். ஒரு விதமான மப்பும் மந்தாரமுமான நாள், போக்கு வரத்துக்கு தேவையான வெளிச்சம் மட்டுமே இருக்கும். ஆனால் முழுமையான சூரிய வெளிச்சம் இருக்காது. அது (சூரியன்) எங்கேயோ ஓரிடத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, இல்லையென்றால் நம்மால் வெளிச்சத்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சரியாக அது ஒரு முழுமையான சூரிய வெளிச்சமாக இல்லை. 76ஆனால் சாயங்காலத்தில் மேகங்கள் விலகின பிறகு, கிழக்கிலே பிரகாசித்த அதே சூரியன் மேற்கிலே பிரகாசித்துக் கொண்டிருக்கும். கிழக்கத்திய மக்கள் மீது வந்த அதே இயேசு, அதே பரிசுத்த ஆவியானவர் ஸ்தாபன நாட்களினூடாக கடந்து வந்து, மேற்கு எல்லையில் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யும்படிக்கு இங்கே இந்த கடைசி நாட்களில் ஊற்றப்பட்டார். அது அதே இயேசு தான், அதே காரியம் தான், அதே அன்பான ஒருவர். இன்றிரவு அவர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கிருக்கிறார். அப்படியாய் வந்திருக்கிறார்! அவர் மாறாத தேவன். அவரால் மாற முடியாது. இல்லை. அவர், அநேக வழிகளில் அதிசயங்களை செய்து, எதிர்பாராத வழிகளில் வருகிறார். சொல்லப்போனால், புதிரான வழிகளில் தன்னுடைய அதிசயங்களை அவர் செய்து காட்டுகிறார். 77ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இயேசு, ''சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் அப்படியே நடக்கும்“ என்று கூறினார். ஆனால்,அவர் கூறின 'சோதோமில் நடந்தது போல” என்பதை குறித்து ஒருவரும் சந்தேகப்படமாட்டார்கள். இப்பொழுது, அக்கினி கொட்டப்பட்டு சோதோம் கொமோராவை எரித்து போடுவதற்கு முன் இவ்விதமாக சோதோம் இருந்தது. இப்பொழுது, நாமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும், உலகமானது அக்கினியால் அழிக்கப்பட இருக்கிற நள்ளிரவு மணி வேளைக்கு சற்று முன்னரும் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 78என்ன நடந்தது? அந்நாளில் மூன்று விதமான மக்கள் இருந்தார்கள். இன்றும் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். முதலாவது சோதோமியர்கள்; அவர்கள் உலகத்துக்கு அடையாளமாயிருந்தார்கள். அடுத்து லோத்தும் அவனுடைய மக்களும் சம்பிரதாயமான, அறிவு சார்ந்த சபைக்கு அடையாளமாயிருந்தார்கள். ஆபிரகாமும் அவனுடைய கூட்டத்தாரும் அங்கே வெளியே இருந்தார்கள். அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு அடையாளமாயிருந்தார்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அங்கே மூன்று விதமான கூட்டத்தார் இருந்தனர். சோதோமியர்கள் இன்றைக்கு இருக்கிற துன்மார்கமான, பாவம் நிறைந்த உலகத்துக்கு அடையாளமாயிருந்தார்கள். அடுத்து குளிர்ந்து போன, வெதுவெதுப்பான சபை அங்கத்தினர், லோத்தும் அவனுடைய கூட்டத்தாரும். அவர்களிலிருந்து வெளியே அழைக்கப்பட்ட ஆபிரகாமும் அவனுடைய கூட்டத்தாரும் அங்கே பாலைவனத்தில் கடினமான ஜீவியம் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். சரி.கர்த்தர் மனித ரூபத்தில் அங்கே இறங்கி வந்தார், அங்கே வந்து நின்ற மூன்று தூதர்களில் இவரே பேசினவர். 79இப்பொழுது, யாரோ ஒருவர், ''சகோதரன் பிரான்ஹாம் அது தேவன் தான் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா?“ என்று கேட்டார். நான், ''அது தேவன் தான்“, என்றேன். ஏனெனில் இப்பொழுது கவனியுங்கள். ஆபிரகாம் அவரை ஆங்கில பெரிய எழுத்து ''L” ஐ கொண்டு கர்த்தர் (LORD) என்று அழைத்தான். ஆங்கில பெரிய எழுத்தாகிய “L” ஐ கொண்டு அழைக்கப்படும் L-O-R-D என்ற வார்த்தைக்கு ஏலோஹிமாகிய தேவனை குறிக்கும் என்று எந்த வேத பண்டிதரும் அறிந்திருக்கிறார்கள். அவர், சரி. அவரால் எப்படி... தேவன் புசித்தாரா? நான், ''நிச்சயமாக“ என்றேன். நான், ”தேவன் தன் கரத்தை நீட்டி ஒரு கைப்பிடி பிரபஞ்ச வெளிச்சத்தை (ஒளி) எடுத்து அதனோடு கொஞ்சம் பெட்ரோலியம், பிரபஞ்ச வெளிச்சம், கொஞ்சம் சுண்ணாம்பு, மற்றும் பொட்டாசியம் இன்னும் சேர்க்க வேண்டியதை எல்லாம் சேர்த்து, வியூ! காபிரியேலே அதில் பிரவேசி; வியூ! மீகாவேலே அதில் பிரவேசி என்றார். பின்னர் அவரும் அதற்குள் பிரவேசித்தார்;. 80அவர் தேவன். அவர் யார் என்பதை காண நீங்கள் தவற விடுகிறீர்கள். அவர் மாறாத தேவன். என்றோ ஒரு நாள் என்னுடைய ஜீவன், மற்றும் பதினாறு கனிமங்களை கொண்ட என்னுடைய சரீரம் இந்த பூமியின் மண்ணுக்குள் திரும்பிப் போகும். ஆனால் அவர் என்னை, ''வில்லியம் பிரான்ஹாம்“ என்று அழைக்கும் போது, நான் திரும்பி வருவேன் என்ற அந்த விசுவாசம் இன்றிரவு என்னிடத்தில் இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் எனக்குள் ஜீவ சுவாசத்தை ஊதுவார், ''அது தான் காரியம்”. அவர், ''நான் மறுபடியும் என் தாயார் மூலமாக பிறக்கும் பிறப்பையும், மற்றவற்றையும் தவிர்த்துவிடுவார். மேற்சொன்ன காரியம், தண்ணீரை திராட்சை மதுவாக மாற்றின இயேசு செய்த முதல் அற்புதத்தை போல் இருக்கிறது. எப்படியெனில் திராட்சை எல்லா செயல் முறைகளையும் கடந்து வந்து கடைசியில் மதுவாக மாறும். ஆனால் அவரோ எல்லா செயல்முறைகளையும் தவிர்த்து, ''தண்ணீரை நேரிடையாக திராட்சை மதுவாக“ மாற்றினார். உயிர்த்தெழும் நாளில், அவர், ”திரு. மற்றும் திருமதி பிரான்ஹாம் நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துகொண்டு வில்லியம்-ஐ பெற்றெடுங்கள்“ என்று சொல்லமாட்டார். அவர் பேச, நான் வருவேன். ஆமென். அது அவர்தான். அவர் தேவன். 81நிச்சயமாகவே அவர் அப்படி செய்து ஆபிரகாமுக்கு முன்பாக நடந்து போனார். இப்பொழுது அவர் என்ன செய்தார் என்று கவனியுங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் கடந்து போகும் போது தூதர்களில் இரண்டு பேர் சோதோமிற்கு சென்று அங்கே பிரசிங்கித்தார்கள். அது சரிதானே? அவர்கள், அங்கே ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் செய்தது என்ன? அவர்கள் அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் செய்தது என்ன? அவர்கள் அந்த சோதோமியர்களை குருட்டாட்டத்தினால் அடித்தார்கள். இப்பொழுது அதே தூதர்கள் இன்றைக்கு சம்பிரதாயமான சபைக்கு பிரசங்கிப்பதை நாம் பெற்றிருக்கிறோம்; ஒருவர் பில்லிகிரகாம் மற்றும் அதுபோன்று இன்னொருவர். உலகத்தை எது குருடாக்குகிறது? அது வார்த்தை. வார்த்தையை பிரசங்கிக்கும்போது, அது அவிசுவாசியை குருடாக்குகிறது. 82ஆனால் தெரிந்துகொள்ளப்பட்டு, வெளியே அழைக்கப்பட்ட சபையையும், அங்கே ஆபிரகாமுடன் பேசின இந்த தூதனையும் கவனியுங்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ஒருசில நாட்களுக்கு முன்பு வரை அவனுடைய பெயர் ஆபிராம் என்று இருந்தது. அவனுடைய மனைவியின் பெயர் சாராய் சா-ரா-ய். ஆனால் தேவன் அவனை ஆவியின் ரூபத்தில் சந்தித்து அவன் பெயரை ஆபிராமிலிருந்து ஆபிரஹாம் என்றும் சாராயிலிருந்து சாராள் என்றும் மாற்றினார். இப்பொழுது இந்த தூதனை கவனியுங்கள். அவருடைய ஆடையில் தூசி படிந்திருந்தது. அவர் ஆபிரஹாமை நோக்கி ''உன்னுடைய மனைவி சாராள் எங்கே“? என்றார். நான் வியப்படைகிறேன், ஆபிரஹாம் இப்படியாக கூறியிருக்கக் கூடும், “என் உள்ளான வழிநடத்துதல் சரியே. ஏதோ காரியத்தை நான் உணர்ந்தேன், அந்த நபர் வித்தியாசமானவராய் இருந்தார்”. அவன், ''உங்களுக்கு பின்னாக இருக்கிற கூடாரத்துக்குள் அவள் இருக்கிறாள்“ என்று கூறினான். அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்று எப்படி அவருக்குத் தெரியும்? அவனுடைய பெயர் மாற்றப்பட்டது என்று எப்படி அவருக்குத் தெரியும்? அவள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறாள் என்று அவருக்கு எப்படித் தெரியும்? “நான் ஒரு உற்பவ காலதிட்டத்தில் திரும்ப வருவேன்” என்று கூறினார். ஆபிரஹாம் திருமணமானவன் என்று எப்படி அவருக்குத் தெரியும்? பாருங்கள்‚ ''உன் மனைவி சாராள் எங்கே?“. இப்பொழுது கவனியுங்கள், அவர், ”நான் ஒரு உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்“ என்றார். இங்கே ”நான்“ என்று சொல்லப்பட்ட வார்த்தை அது அவரையே குறிக்கும் தனிப்பிரதிப் பெயர். அவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? பாருங்கள்‚ அவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 83சாராள் கூடாரத்தில் இருந்தபடி, ''என்னால் எப்படி முடியும்“ என்று நகைத்தாள். வேறு வார்த்தையில் சொல்வோமானால், அவள் தனக்குள் வெட்கத்தால் நகைத்து, பாருங்கள், ”இப்பொழுது எனக்கு எப்படி மறுபடியும் இன்பம் உண்டாயிருக்கும்?“, என்றாள். ஆபிரஹாம் நூறு வயதாயிருந்தான், அதை வேதாகமம் இப்பொழுது இங்கே தெள்ளத்தெளிவாய் கூறுகிறது. அவர்கள் இருவரும் மிகவும் வயதானவர்களாயிருந்தார்கள். சாராளுக்கு வழிபாடு நின்று நீண்ட நாட்களானது. ஆபிரஹாமுடைய சரீரம் மரித்ததற்கு ஒப்பாக இருந்தது. அவளுடைய கர்ப்பமோ காய்ந்து அநேக வருடங்களாக மரித்துப் போயிருந்தது. நான், “உன்னை உற்பவ காலத்திட்டத்தில் வந்து சந்திப்பேன். நீ இந்த பிள்ளையை பெறுவாய்” என்றார். முடிப்பதற்கு முன்னதாக, இப்பொழுது கவனியுங்கள். அப்பொழுது சாராள் நகைத்து; “அது எப்படி நிகழும்? நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர் வயதுள்ளவருமானபடியால், எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்”. இப்பொழுது கவனியுங்கள், இங்கு சொல்லப்பட்ட ஆண்டவன், l-o-r-d ஆங்கில எழுத்தாகிய சிறிய “l” - ஐ கொண்டு கூறப்பட்டிருக்கிறது. இங்கே, “என் ஆண்டவன் (lord) முதிர் வயதுள்ளவாரானபடியால்”, என்பது ஆபிரஹாமைக் குறிக்கிறது. அந்த தூதன், ''ஏன் சாராள் நகைத்தாள் “, என்றார். ஓ என்னே. 84இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள் “நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், சோதோமின் நாட்களில் நடந்தது போலவும் மனுஷ குமாரன் வரும்போதும் அப்படியேநடக்கும்” என்று இயேசு கூறினார். அது என்னவாயிருக்கிறது?. அது பரிசுத்த ஆவியாகிய தேவன், விசுவாசத்தின் மூலம், தேவனுடைய குமாரனின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாகிய மனித சரீரத்தின் மத்தியில் வாசம் செய்வதாகும். தேவன் தாமே இந்த பாத்திரங்களில் வாசம் செய்து இயேசு கிறிஸ்துவின் அதே கிரியைகளை தொடர்ந்து நடப்பித்து அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என நிரூபிக்கிறார். 85நாம் பரிசுத்த ஆவியினால் அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருப்போமாகில், நாம் அவருடைய சரீரமாக ஆகின்றோம். பின்னர் நாம் அவரோடு கூட உயிர்த்தெழுந்தும் இருக்கிறோம். அவர் உயிர்த்தெழும்போது நாமும் அவரோடு கூட உயிர்த்தெழுந்தோம். அவர் தலையாக இருப்பதினால் தலையோடு சரீரமும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் ஒரு விசை தாம் செய்த கிரியைகளை, இன்றைக்கு கிறிஸ்துவானவர் சபையிலும் உங்களுக்குள்ளாகவும் இருந்து கிரியை செய்கிறார். பரிசுத்த யோவான்;. 14:12-ல் ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளை அவனும் செய்வான்“ அது சரி. எபிரேயர். 13:8-ல் ''இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”, என்று கூறுகிறது. அதை கவனியுங்கள்? மக்கள் நம்மை அவ்விதமாக எதிர்பார்கிறதில்லை. அவர்கள் நம்மை படிப்பறிவில்லாத ஒரு கூட்ட மக்கள் என்றும், அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்களோ அதைப் பற்றி ஒன்றும் அறியாதிருக்கிறார்கள் என்றும் இவ்விதமாக எதிர்பார்க்கிறார்கள். ஒரு போலியான ஜனக்கூட்டம் என்று நம்மை அவர்கள் நம்புகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் பேசுகிற எண்ணத்தின்படி நாம் இருக்கக்கூடும். ஆனால் நாமோ பரிசுத்த ஆவியை தேவன் அருளிய வழியில் ஏற்றுக் கொண்டு, அங்கே அவர்கள் (சீஷர்கள்) பெற்ற பலனை நாமும் பெற்றவர்களாயிருக்கிறோம். எனவே அது அவர் இருக்கிறார் என்றும், அவர் மாறாத தேவன் என்றும் நிரூபிக்கிறது. நாமும் அதே பலனை பெற்றிருக்கிறோம். ஆமென். 86என்னை பெற்ற என் தாயார் மரிக்கும் தருவாயில், ''பில்லி, நீ எனக்கு ஒரு ஆவிக்குரிய வழிகாட்டியாய் இருந்தாய்“ என்றார்கள். அநேக வருடங்களுக்கு முன்னர் நான் அவர்களுக்கு ஞாஸ்நானம் கொடுத்தேன். நான், ''அம்மா...“ என்றேன். நாங்கள் கத்தோலிக்கர்கள் என்று உங்களுக்குதெரியும். நான் சிறு பையனாக இருக்கும்போது முதன் முதலில் கர்த்தரே தேவன் என்று அறிந்து கொண்டபோது, அதை என் வாழ்நாள் முழுவதும் அறிந்திருந்தேன், ஆனால் என்னுடைய மக்கள் (வீட்டார்) ஒருபோதும் சபைக்கு சென்றதில்லை. அதற்கு பின்பு நான் அந்த (கத்தோலிக்க) ஆசாரியரிடத்தில் சென்று பேசினபோது, அவர் “இதுதான் சபை, இதுதான் வழி” என்றார். நான், “சரி, வேதாகமம்? தயவு செய்து நான்...?” அவர், ''இப்பொழுது நீ முழுவதும் குழம்பி இருக்கிறாய். பாருங்கள்‚, இது தான் சபை. தேவன் அவருடைய சபையில் இருக்கிறார். நீ சபையைத்தான் விசுவாசிக்க வேண்டும்“ என்றார். சரி, நான் லூத்தர்களிடத்தில் கடந்து சென்ற போது, அவர்கள் ''நாங்கள் தான் சபை, நாங்கள் தான் விசுவாசிகளின் கூட்டமாயிருக்கிறோம்“ என்றார்கள். மெதொடிஸ்ட்களிடத்தில் நான் சென்ற போது,அவர்கள் “நாங்கள் தான் விசுவாசிகளின் கூட்டமாயிருக்கிறோம்” என்றார்கள். பாப்டிஸ்ட்களிடத்தில் சென்ற போது, அவர்கள் ''இல்லை அவர்கள் எல்லோரும் தவறாயிறுக்கிறார்கள், நாங்கள் தான் அது“ என்றார்கள். 87''இங்கே என்னதான் நடக்கிறது?“ என்று நினைத்தேன். ”சபை என்பது ஒரு கூட்ட மக்கள் ஆகும்“. ஒருவர் இதுதான் வழி என்கிறார். இன்னொருவர் இதுதான் வழி என்கிறார். இதுதான் வழி, அது தான் வழி, அது தான் வழி என்கிறார்கள். ஏதோ காரியம் தவறாயிருக்க வேண்டும். எனவே, அம்மா, ''நான் சரியாக திரும்பவும் வேதாகமத்திற்குச் சென்று, ஆதி சபை எதை செய்ததோ அதை சரியாக வாசித்தேன்“. அவர்கள் எந்த வழியில் செய்தார்களோ அதே வழியில் நானும் செய்து அதே பலன்களை பெற்றுக் கொண்டேன் என்றேன். நான், ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது எனக்கு முற்றிலும் போதுமானதாயிருக்கிறது” என்றேன். நான் அதே பலன்களை பெறும் வரைக்கும், அதே (மாறாத) இயேசுவை பார்க்கிறேன். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், நிசாயா ஆலோசனை சங்கம் முன்னர் வரைக்கும் கிரியை செய்த அதே தேவனை பார்க்கிறேன். வேதாகமத்திற்கு பதிலாக கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ரோமன் கத்தோலிக்க சபை வரும் வரைக்கும் அங்கே கிரியை செய்த தேவன் இருண்ட காலங்களில் ஊடாக வெளியே சென்று, லூத்தர், வெஸ்லி மூலமாக இங்கே லவோதிக்கேயா சபை காலத்தில் திரும்பி வந்தார். ''சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாயிருக்கும்“. நான் இங்கே நிற்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவாக தேவன் ஒரு சபையை வெளியே இழுப்பார். அது நிச்சயமாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அதே வாக்குத்தத்தங்களைக் கொண்டு அதே கிரியைகளையும், அதே காரியத்தையும் செய்வதை பார்ப்பீர்கள். கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப்படுவதாக. 88அங்கே அவர்களுக்கு அவர் கொடுத்த அதே பரிசுத்த ஆவியை எந்த ஒரு மாற்றமுமின்றி, மாறாத தேவன் தாமே அதை உங்களுக்கு கொடுப்பார். அவர் பூமியின் மீது இருந்த போது அவர் செய்த அதே கிரியைகளை அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற எந்த ஒரு புருஷனுக்கும், ஸ்திரீக்கும் அவர் செய்வார். நீ பரிசுத்த ஆவியை பெற்று இருப்பாயானால் யாக்கோபு அதை பிடித்துக் கொண்டது போல இறுகப் பிடித்துக்கொள். எப்படியெனில், நிச்சயமான பலனை பெறும் வரைக்கும் அதை இறுக பற்றிப் பிடித்துக்கொள். ஆமென். அதை விசுவாசியுங்கள், நண்பர்களே. அது எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் இருக்கலாம். அவர் தாமே அதை எதிர்பாராத இடத்தில் செய்வாரானால் இன்றிரவு அது நிகழ்வதை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடத்தில் அவர் எவ்வளவு அதிகமாய் செய்யக் கூடும்? நாம் சற்று தலை வணங்குவோமாக. 89உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் வேளையில், உங்கள் இருதயங்களும் வணங்கியிருக்கிறது என்று நம்புகிறேன். நான் முடிந்தவரை நீண்ட நேரம், ஒன்பது மணி வரை உங்களை காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்கவும். ஆனால் நான் உங்களை இந்த கேள்வி கேட்க விரும்புகிறேன்: ஒரு வேளை நாம் மறுபடியும் சந்திக்க கூடாமல் போகலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நம்மில் சிலருக்கு காலை பகல் வெளிச்சம் கூட வராமல் போகலாம். நாம் அடுத்த நாள் காலைப் பொழுதை பார்க்க முடியாமல் போகுமானால், நதிக்கு அப்பால் (அக்கரை) நாம் மறுபடியும் சந்திக்கக் கூடுமோ? நான் இன்றிரவு பேசின இந்த மக்கள், அவர்கள் வார்த்தையின் நிச்சயத்தை பெற்றது போல நீங்களும் தேவனை சந்தித்தபோது வார்த்தையின் அனுபவத்தின் நிச்சயத்தை, அதாவது வார்த்தையின் நிச்சயத்தையும், உங்கள் இருதயத்தில் சமாதானத்தையும் பெற்றவர்களாய் இருக்கிறீர்களா? தேவன் உங்கள் ஜீவியத்தை முற்றிலும் மாற்றியிருக்கிறார். நீங்கள் ஏதோ மறுபடியும் புதுப்பிக்கப்பட்ட அல்லது மெறுகேற்றப்பட்ட அதே பழைய நபராக இப்பொழுது இல்லை. ஆனால் நீங்கள் புது சிருஷ்டியாய், கிறிஸ்துவுக்குள் ஒரு புது சிருஷ்டியாய் இருக்கிறீர்கள். 90நீங்கள் அவ்விதமாக இல்லாத பட்சத்தில்... பீடத்தண்டையில் நாம் நிற்பதற்கோ அல்லது இடவசதியோ இல்லை. ஆனால் நான் உங்களுடைய உத்தமத்தை இங்கே கேட்கிறேன். என்றோ ஒரு நாளில் நான் உங்களை மறுபடியும் சந்திப்பேன் என்றும், இன்று இரவு நான் பேசின வார்த்தைகளுக்கு பதில் கூற வேண்டியதாயிருக்கிறது என்பதை அறிந்தவனாய், நான் இங்கே இந்த பிரசங்க பீடத்திலிருந்து உங்களுக்கு ஜெபத்தை ஏறெடுக்க விரும்புவீர்களானால் தயவு செய்து உங்களுடைய தலைகளை தாழ்த்தி, கண்களை மூடி, உங்களுடைய கரங்களை மேலே உயர்த்தி, ''நான் அவ்விதமாய் இருக்க எனக்காக ஜெபியுங்கள், சகோதரனே“ என்று குறிப்பிடுவீர்களா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை ஆசீர்வதிப்பாராக. வாலிப ஸ்திரீயே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. வெளியிலும் எங்கிருந்தாலும் உங்களுடைய கரத்தை ஜன்னலின் மீது வையுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆழ்ந்த உத்தமத்தோடு உங்கள் கரங்களை உயர்த்தி ''கர்த்தாவே என் மேல் இரக்கமாய் இரும்“ என்று சொல்லுங்கள். சகோதரன் பிரான்ஹாம், நான் எப்பொழுதும் அந்த விதமாக இருக்க விரும்புகிறேன், ஆனால் எப்படியோ ஏதோ வழியில் என்னால் அதைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. 91ஓ‚ விலையேறப்பெற்ற நண்பனே, இந்த காரியத்தை நீ பற்றிப் பிடித்துக் கொள்ள மாட்டாயா? என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசி. பரிசுத்த ஆவியானவர் சரியே. ஒருவரும் உங்களிடத்தில் வந்து பேசி அதை எடுத்துப்போட அனுமதியாதீர்கள். கிறிஸ்தவ நண்பனே, மாறாத தேவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொள். நீ இப்பொழுது தான் சபையில் சேர்ந்திருந்தாலும், நீ இப்பொழுது தான் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், இன்னுமாக பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லையென்றால் உண்மையில் நீ மறுபிறப்பை பெற்றுக் கொள்ளவே இல்லை. இப்பொழுது, நீங்கள் கூறலாம், ''சகோதரன் பிரான்ஹாம் நான் அந்நிய பாஷையில் பேசி இருக்கிறேன். நான் இதை, அதை செய்து இருக்கிறேன்“. இப்பொழுது அதை நானும் கூட விசுவாசிக்கிறேன் என்று நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஆவியில் நடனம் ஆடலாம். நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசவும் செய்யலாம். இந்துக்கள் அப்படியாக செய்வதை நான் பார்த்திருக்கிறேன். சூனியக்காரர்கள் அந்நிய பாஷைகளில் பேசி அதற்கு வியாக்கியானம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். நான் இதை கேள்விப்பட்டேன். ஒரு தடவை அங்கிருக்கும் சகோதரர்கள் ஒரு கூடாரத்திற்குள் சென்றபோது ஒரு மேஜையானது பாஷையில் சத்தமிட்டபோது ஒரு பென்சில் தோன்றி அதை அந்நிய பாஷைகளில் எழுதியது. அதை அவர்கள் படித்தும் காட்டினார்கள். பாருங்கள்‚ இந்த எல்லா காரியங்களும் பிசாசாய் இருக்கக்கூடும். 92ஆனால் சகோதரனே, நீ அந்நிய பாஷையில் பேசி தொடந்து பழைய ஜீவியத்தையே ஜீவிப்பாய் என்றால் உன்னுடைய அனுபவத்தில் ஏதோ தவறு இருக்கிறது. பாருங்கள்‚ நீ அவ்விதமாய் இருப்பாயானால் வெறுமனே நீ அந்நியபாஷை பேசுவதில் மட்டுமே சார்ந்திருக்கிறாய், அதை செய்ய ஒருபோதும் முயற்சிக்காதே. நீர் விழ்ச்சியில் நீ அடித்து செல்ல நேரிடும், அந்த படகும் அதற்கு தாக்குப் பிடித்து நிற்காது. ''அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம். தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். ஆனால் நிறைவானது வரும்போது“, ஓ, மிகவும் ஐஸ்வரியமும், சுத்தமானதும், அளவிட முடியாததும், பெலமுள்ளதுமான அந்த தேவனுடைய அன்பு வரும்போது பின்னர் இந்த மற்றவரங்கள் யாவும்; அதனோடு கூட சரியாய் கிரியை செய்யும். பாருங்கள்! அந்நிய பாஷைகளில் பேசுவது, தீர்க்கதரிசனம் உரைப்பது இன்னும் வியாக்கியானங்களும் இவையெல்லாம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய வரங்கள் ஆகும். இவையெல்லாம் சபையாகிய சரீரத்தின் பக்திவிருத்திக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. ”ஆனால் உங்களுடைய ஜீவியம் மாற்றப்பட்டது என்பதைப் பார்க்க முதலாவது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள்“. 93இப்பொழுது நான் பேச ஆரம்பித்ததிலிருந்து இங்கே எட்டு அல்லது பத்து கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. நான் ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பாக இன்னும் யாராகிலும் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சீமாட்டியே. சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் யாராகிலும் இருக்கிறீர்களா? முழு உத்தமத்தோடு உங்கள் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், என்னை நினைவு கூறுங்கள்” என்று சொல்லுங்கள். சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. இன்னும் யாராகிலும்? எனக்காக ஜெபியுங்கள் என்று மட்டும் சொல்லுங்கள். என் நண்பனே நான் உனக்காக ஜெபம் மட்டுமே செய்யமுடியும். சீமாட்டியே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கிருக்கிற சகோதரியே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அவர் உங்கள் கரத்தைப் பார்க்கிறார். இயேசு கிறிஸ்து கூறினதை நினைவில் கொள்ளுங்கள்.''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்“. அதை நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். வெறுமனே உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றை கொண்டும் அவரை விசுவாசியுங்கள், மற்ற காரியங்களை தேவன் பார்த்துக்கொள்வார். 94பரலோகப் பிதாவே, இந்த சிறிய கூட்டத்தாரை உம்மிடத்தில் கொடுக்கிறோம். ஆண்டவரே, இன்றிரவு இந்த உடைந்து போன, பதற்றத்துடன் பேசப்பட்ட வார்த்தைகளோடு, அங்கே மக்கள் தங்கள் கால்கள் வலிக்க நின்றுக் கொண்டிருப்பதை நான் இங்கே நின்றவாறு உணரமுடிகிறது. தேவனே, அவர்கள் ஆத்துமாக்களை நான் உரிமை கோருகிறேன். தேவனே, என்னுடைய எளிய வழியில் எவ்வளவு சிறப்பாக வார்த்தையைகொண்டு வர முடியுமோ அதை கொண்டுவந்திருக்கிறேன். அதில் எவ்வளவு சிறிய வித்து இருந்தாலும் அதை மக்களுடைய இருதயத்தில் விதைத்திடும், பிதாவே. அவர்களுடைய ஆத்துமாக்கள் இழக்கப்பட வேண்டாம், ஆனால் உயிர்தெழும் அந்நாளில் அவர்கள் மறுபடியும் அங்கே காணப்படும்படிக்கு அவர்களுடைய ஆத்துமாக்களை நான் உரிமை கோருகிறேன். இதை அளியும், பிதாவே. 95நீரே தேவன். உம்மைத் தவிர வேறே தேவன் இல்லை. புறஜாதிகளுக்கு விக்கிரகங்கள் உண்டு. நமக்கோ ஜீவனுள்ள தேவன் உண்டு, அவர் ஒருவரே மெய்யான ஜீவனுள்ள தேவன். பிதாவே, ஆயிரம் கோடி சூரியனைக் காட்டிலும் பல லட்சம் மடங்கு பிரகாசமுடைய உம்மைக் குறித்து, அங்கே நித்தியத்திலே நாங்கள் நினைத்துக் கொண்டேயிருப்போம். ஓ தேவனே, உம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்க செய்யும்‚ உலகங்களை சிருஷ்டித்து, சூரிய குடும்பத்தை விண்ணிலே வைத்து, பின்னர் ஒரு பாவியை இரட்சிக்கும்படி கீழே இறங்கி வந்த நீர், இன்றிரவு இந்த சிறிய கூடாரத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களோடு இருக்க எவ்வளவாய் பிரியம் கொண்டுள்ளீர். ஏனெனில் இந்த வார்த்தையை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார், அது 'இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே என் நாமத்தினாலே கூடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்“. இப்பொழுது பிதாவே, இந்த மக்களை இரட்சியும். என்னுடைய ஜெபத்திற்கு நீர் பதில் கொடுப்பீர் என்று நான் நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன். இதைத் தவிர வேறு ஏதும் எனக்கு கேட்கத் தெரியவில்லை. அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கவில்லைஎன்றால், ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள ஆயத்தமாய் சரியாக நாளை சபையில் இருக்கட்டும், கூடுமானால் இன்றிரவு அப்படி செய்ய ஆயத்தமாய் வரட்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி ஜெபிக்கிறேன். மரணம் அவர்களை விடுவிக்கும்வரை இந்த உண்மையான தேவனுடைய சத்தியத்திலே நிலைத்திருப்பார்களாக. இயேசுவின் நாமத்திலே இவைகளை ஜெபிக்கிறேன். ஆமென். 96இப்பொழுது, இங்கு இருக்கும் கூட்டத்தாரே நான் பயபக்தியோடும், பரிசுத்தத்தோடும் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒருசில நிமிடங்களில் நாம் முடிக்கப் போகிறோம். நான் ஏற்கனவே சொன்ன விதமாக நாம் மறுபடியும் சந்திக்கக் கூடாமல் போகலாம். அப்படியாக நாம் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இன்றிரவைக் குறித்து நாம் நியாயத்தீர்ப்புக்கு வரும்போது கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நான் பேசின காரியத்தைக் குறித்தும், நான் செய்த காரியத்தைக் குறித்தும் நானும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கிறேன். இவையெல்லாவற்றையும் குறித்தும் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்கப்பட வேண்டும். நான் குற்றவாளியாக கண்டுபிக்கப்படுவேன் என்றால், எனக்கு என்ன நேரிடும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் ஒரு பாவியாய் மரிப்பேனே தவிர, ஆனால் ஒரு வஞ்சகனாக மரிக்கமாட்டேன். எனவே நான் உண்மையும், உத்தமனாகவும் இருக்கட்டும். 97இப்பொழுது, கவனியுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருப்பார் என்றால்... நான் இப்படியாக ஜெபிக்கப் போகிறேன். இப்பொழுது, அப்படி செய்வாரா என்று எனக்கு தெரியாது. ஏனெனில் இது வெறுமனே சிறு கூட்ட மக்களாக இருக்கிறார்கள்... இங்கே மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள், நேரமும் ஆகிவிட்டது. நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். இங்கு ஜெப வரிசை வைப்பது கூடாத காரியமாய் இருக்கும். ஆனால் கூட்டத்தில் உள்ளஉங்கள் எல்லோருக்காகவும் நான் ஜெபிக்கப் போகிறேன். யாக்கோபு பெற்றுக் கொண்டது போல நீங்களும் ஏதோ ஒன்றை பற்றிப் பிடித்து அதை பெற்றுக் கொள்ளும்படிக்கு உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்“ பாருங்கள், நீங்கள் இதுவரை பெற்றிராத அந்த காரியத்தை பற்றிப் பிடித்துக் கொள்ளும்படிக்கு. 98இப்பொழுது, துன்பப்பட்டு கொண்டிருக்கும் வெளியே உள்ள மக்களே உங்களிடத்தில் கீழே வந்த தூதனை குறித்து பேசியிருக்கிறேன். அவர் மனித சரீரத்தில் வெளிப்பட்ட தேவன். நாம் விசுவாசிகளாய் இருக்கும் பட்சத்தில் நம்மிடத்திலும் அவர் வெளிப்படுவார். தன்னுடைய முதுகை சாராள் பக்கமாக திருப்பின அவர் தாமே தன்னிடத்தில் கேட்டுக் கொண்டிருந்த சாராள் என்ன பேசுகிறாள் என்றும், என்ன செய்கிறாள் என்றும் அவர் அறிந்து கொண்டார். அதை இன்னும் உங்களிடத்தில் தெளிவாக கூறட்டும், ஒரு சமயம் அவர் ஜனங்களின் மத்தியில் கடந்து போகும்போது, இங்கிருக்கும் யாரோ ஒருவரை போல், ஏமாற்றம் அடைந்த ஒரு ஸ்திரீ அக்கூட்டத்தில் இருந்தாள். கடந்த இரவு நாங்கள் ஒரு சிறிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டோம். நாங்கள் அநேக மக்களுக்கு ஜெபிக்க இருந்ததால், நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பையனை சில ஜெப அட்டைகளை கொடுக்கச் செய்தோம். ஏனெனில் அவர்கள் சில சமயங்களில் வருவதும் போவதும், மறுபடியும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மற்றும் நீங்கள் எல்லோரும் ஞாயிறு ஆராதனைக்கு போகவேண்டும். ஆகவே வெளியே யாரோ ஒருவர் என்னிடத்தில், “அவர்களை சீக்கிரமாய் அனுப்பிவிடுங்கள், ஏனெனில் அவர்கள் அதிக தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஞாயிறு ஆராதனையில் பங்குகொள்ள வேண்டியதாய் இருக்கிறது”, என்றார். நான் அந்த வாக்கைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் அதைச் செய்வேன், என்றேன். 99பாருங்கள்‚ முக்கியமான காரியம் என்னவெனில், அசலான ஒன்றை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். எத்தனை பேர் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்கின்றனர்). பின்பு, நான் உங்களிடத்தில் கூறியிருக்கிறேன், ஜான் டிலிங்கரின் ஆவி என்மேல் வருமானால் நான் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நபராக வெளியே சுற்றிக்கொண்டிருப்பேன். நான் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு சட்டத்துக்கு புறம்பானவனாயிருப்பேன். நான் என்மேல் மகத்தான ஓவியனின் ஆவி இருக்கிறது என்று சொல்வேன் என்றால், அவன் ஓவியத்தை வரைந்தது போல் நானும் வரைய என்னை எதிர்பார்ப்பீர்கள். நான் என்மேல் தப்பிக்கும் கலைஞனாகிய (Escape artist) ஹுடினியின் ஆவி இருக்கிறது என்று சொல்வேன் என்றால் அவன் செய்தது போலவே நானும் செய்ய வேண்டும் என்று என்னை எதிர்பார்ப்பீர்கள். நான் என்மேல் மகத்தான இசைக் கலைஞனின் ஆவி இருக்கிறது என்று சொல்வேன் என்றால் அவன் இசையை வாசித்த வண்ணம் நானும் வாசிக்க வேண்டும் என்று என்னை எதிர்பார்ப்பீர்கள். பாருங்கள்‚ 100நான் என்மேல் கிறிஸ்துவின் ஆவி இருக்கிறது என்று சொல்வேன் என்றால் கிறிஸ்துவின் கிரியைகளை நான் செய்ய வேண்டும். கிறிஸ்து, “தேவன் தனக்குள் வாசம் செய்கிறார்”, என்றார். தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்தை தனக்குத்தானே ஒப்புரவாக்கிக் கொள்ள, தேவன் கிறிஸ்துவுக்குள் தன்னைத் தானே பிரதிநித்துவப்படுத்தினார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் தான் இம்மானுவேல். இயேசு, ''கிரியை செய்வது நான் அல்ல, எனக்குள் வாசம் செய்கிற பிதாவானவரே கிரியை செய்கிறார். அவரே கிரியை செய்கிறார்“,என்றார். அதே ஆவியை உடையவராக அவர் கூட்டத்தினர் மத்தியில் கடந்து சென்றபோது, ஒரு சிறிய ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். இப்பொழுது, அவர் அதை சரீர பிரகாரமாக உணரவில்லை. உங்களுக்கு தெரியும் அவர் அதை உணரவில்லை. நிச்சயமாகவே அதை உணரவில்லை. ஏனெனில், யாராவது அறிந்திருப்பார்களானால், பாலஸ்தீன உடையானது உள்ளுக்குள் இன்னொரு ஆடையை பெற்றிருக்கும். அதாவது ஒரு பெரிய தளர்ந்த ஆடை இப்படியாய் தொங்கிக் கொண்டிருக்கும். எனவே அவரால் அதை உணரமுடியாது. மற்றும் அவரை சுற்றி அநேகர் இருந்தார்கள். “ஆனால் அவளோ அவருடைய வஸ்திரத்தை விசுவாசத்தினால் தொட்டாள்”. 101ஒரு நாளில் குருடனான பர்திமேயு வாயிலண்டையில்அவருடைய வஸ்திரத்தை தொட்டான், எனெனில் அவர் அப்படிப்பட்ட சத்தத்தை ஒருபோதும் கேட்டதே இல்லை. சிலர் அவரிடத்தில், ''ஓய், நீ மரித்தோரை உயிரோடு எழுப்பினாயே. இங்கே வெளியே கல்லறைத் தோட்டம் முழுவதும் மரித்தவர்கள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார்கள், வந்து அவர்களை உயிரோடே எழுப்பு“ என்று பரியாசம் பண்ணினார்கள். இன்னும் ஆசாரியர்களும் மற்றவர்களும் அவரிடத்தில் வந்து இதைச் செய், அதைச் செய், என்றார்கள். அவரோ ஒரு வார்த்தையும் மறுஉத்தரவு சொல்லவில்லை. ஆனால் ஒரு குருட்டு பிச்சைக்காரன் அவரை, ''ஓ தேவனே‚“ என்று கூப்பிட்டான். அதைக் கேட்டு இயேசு நின்றார். ”அவனை இங்கே கொண்டு வாருங்கள் என்றார்.“ பாருங்கள்‚ 102அந்த ஸ்திரீ அவருடைய கவனத்தை திசைத் திருப்ப முடியாது என்று அறிந்துக் கொண்டாள், ஏனெனில் ரபீக்களும், ஆசாரியர்களும், எல்லாரும் அவரை சூழ்ந்து இருந்தார்கள். அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இயேசு நின்று, ''என்னை தொட்டது யார், என்று கேட்டார்“. பேதுரு அவரை அவ்வளவாக கடிந்து கொண்டு, எல்லோரும் உம்மை தொட்டுக் கொண்டிருக்கையில், உம்மை தொட்டது யார்? என்று ஏன் அப்படிப்பட்ட வார்த்தையை பேசுகிறீர்? என்றான். அதற்கு அவர், ''ஆனால் என்னிடத்திலிருந்து வல்லமை, பெலன் புறப்பட்டு சென்றதை நான் உணருகிறேன், குறிப்பாக யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்கள்“ என்றார். அவர் அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்து அந்த ஸ்திரீயை கண்டுபிடித்தார். அவளுடைய பிரச்சனை என்ன? அவள் உதிரப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். இயேசுவின் மேல் விளைவை உண்டாக்கும் அளவுக்கு அவளுக்கு தேவனைத் தொடக்கூடிய போதுமான விசுவாசம் இருந்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் கிறிஸ்து நமக்குள்ளாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய அதே வாஞ்சை அதே காரியத்தை தொடாதா? 103இப்பொழுது, நான் ஊழியக்காரர்களை ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நம்முடைய பெலவீனங்களால், இப்பொழுது தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியனாக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று வேதாகமம் சொல்லவில்லையா? அது சரி தானே? (ஊழியக்காரர்கள், அது சரி, என்கின்றனர்) அது சத்தியம் என்று எத்தனை பேருக்கு தெரியும்? (ஆமென்). வேதாகமம், புதிய ஏற்பாட்டில், அவர் இப்பொழுது நம்முடைய, எதினால்? நம்முடைய பெலவீனங்களால் தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியனாக இருக்கிறார், என்று கூறுகிறது. சரி, அப்படியென்றால் நீங்கள் அவரைத் தொட்டீர்கள் என்று எப்படி அறிவீர்கள்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கும்பட்சத்தில், நேற்று என்ன காரியத்தை செய்தாரோ அதே காரியத்தை தான் இன்றும் செய்வார். அது சரிதானே? (சபையார் ஆமென் என்கின்றனர்) 104சரி, இப்பொழுது இந்த பூமியில் அவருக்கு உங்களுடைய மற்றும் என்னுடைய கரத்தைத் தவிர வேறே கரங்கள் இல்லை. பூமியில் அவருடைய சத்தம் நம்முடைய சத்தமாயிருக்கிறது; நம்முடைய சத்தம் (குரல்) அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதினால் தான் நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம். அது நம்மால் உண்டானது அல்ல என்று நாம் விசுவாசிக்கிறோம். அப்படிப்பட்ட காரியங்களை பேசும்படிக்கு நாம் ஏவப்பட்டிருக்கிறோம், நம் மூலமாக இருந்து பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். பாருங்கள்‚ நம்மால் அதைச் செய்ய முடியும் என்று ஒருபோதும் விசுவாசிக்கிறதில்லை. நிச்சயமாக இல்லை. என்னால் முடியாது என்று நான் அறிந்திருக்கிறேன். அது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் செய்யப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். அல்லாமல் ஒருவன் மாறுபாடான ஏதோ ஒன்றை பிரசங்கிப்பானேயாகில் அவன் வார்த்தையை மறுதலிக்கிறான். ஆனால் வார்த்தையை எழுதின, அதே பரிசுத்த ஆவியானவர் மனம்மாறின ஒரு மனிதன் மூலமாக பேசும் போது, அவரால் வார்த்தையை எப்படி மறுதலிக்க முடியும்? அவர் அதைச் செய்யமாட்டார். அது வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும். அது சரியாக எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அப்படியே அது பிரசங்கிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. 105இப்பொழுது அவர் பிரதான ஆசாரியராய் நமக்கிருக்கும் பட்சத்தில், அந்த ஒரு வசனத்தை நாம் திடமாக பிடித்துக் கொள்ளுவோம். அதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். நம்முடைய பெலவீனங்களினால் தொடக்கூடிய பிரதான ஆசாரியராய் அவர் இருப்பாரானால், அதை ஒரே வழியில் தான் நீங்கள் அறிந்துக் கொள்ளமுடியும். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறபடியால், அந்த ஸ்திரீ அவரைத் தொட்டபோது அவர் எப்படி கிரியை செய்தாரோ சரியாக அதே விதமாக இன்றும் கிரியை செய்வார். இப்பொழுது நான் அவருடைய ஊழியக்காரனாக இருந்து, அவருடைய ஆவி என் மேலாக இருக்கும் என்றால் நீங்கள் எங்கிருந்தாலும் அவருடைய வஸ்திரத்தை தொடலாம். என்னுடைய வஸ்திரம் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. நான் ஒரு மனிதன், கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. ஆனால் உங்கள் மனைவியோ, உங்கள் புருஷனோ, அல்லது சகோதரனோ, உங்கள் மேய்ப்பரோ, அது யாராயிருந்தாலும் இவர்களைக் காட்டிலும் நான் பெரியவன் அல்ல. நாம் எல்லோரும் ஒரே விதமாக இருக்கிறோம். ஆனால் அவர் ஒருவரே பிரதான ஆசாரியராயிருக்கிறார், நான் பிரதான ஆசாரியன் அல்ல. அவரே பிரதானஆசாரியனாக இருக்கிறார். என்னை தொடுவதினால் ஒரு நன்மையும் கிடைக்காது; அவரை தொடுவீர்கள் என்றால் உங்களுக்கு நன்மை உண்டாகும். ஆனால் என்னை அவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது... இங்கே இருக்கிற ஒலிபெருக்கியைப் போல் இருக்கிறேன். இந்த ஒலிபெருக்கியினிடத்தில் (Mike) ஏதோ ஒன்று பேசும் வரைக்கும் அது அவ்வளவாய் அமைதியாயிருக்கும். அது சரிதானே? (சபையார் ஆமென் என்கின்றனர்) 106சரி, பின்பு, அங்கே வெளியே உள்ள ஒருவரையும் எனக்கு தெரியாது. அது தெரிந்தவர்கள் மீது வருவதை நான் பார்ப்பேன் என்றால், நான் ஒன்றையும் கூறமாட்டேன். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சகோதரன் மற்றும் சகோதரி டாக் அவர்களை எனக்குத் தெரியும். கிரேக்க நாட்டிலிருந்து வந்திருக்கிற சிறிய சகோதரன் இவர்தான் என்று நினைக்கிறேன், டேவிட், இவருடைய பெயர் சரியாக நினைவுக்கு வருவதில்லை. இவர்களைத் தவிர... சரியாக இங்கே உள்ள இந்த மக்கள், சரி, இந்த மூன்று அல்லது நான்கு பெண்கள் முன் வரிசையில் உட்கார்ந்துள்ள இவர்களை எனக்கு தெரியும், காரணம் அவர்கள் ஜார்ஜியா மற்றும் அங்கே உள்ள டென்னிஸியிலிருந்து வருகிறார்கள். இவர்கள் என் சபைக்கு வருகிறார்கள். சிலர் ஆயிரத்து ஐநூறு மையில்கள் கார் ஓட்டி, இங்கே ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நான் பிரசங்கிப்பதைக் கேட்க வருகிறார்கள். அது மட்டுமல்லாமல், அங்கே சகோதரி இவான்ஸ், மற்றும் அவரோடு கூட சகோதரி அங்ரென், மற்றவர்களும், சகோதரன் இவான்ஸ் அவர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் இதை உங்களிடத்தில் கேட்கிறேன். இங்கே எத்தனை பேர் வியாதிப்பட்டும், நான் உங்களை அறிந்திருக்கவில்லை என்றும், உங்களை பற்றி ஒன்றும் தெரியாது என்று எத்தனை பேருக்கு தெரியும்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். 107இப்பொழுது, பரலோகப் பிதாவே, என்னுடைய இருதயம் உமக்குதெரியும். மற்றும் இதற்காக நான் இங்கே வரவில்லை, அதென்னவெனில், ஆண்டவரே, உம்மை மேடையில் பகட்டாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அதை நீர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதை நீர் செய்ய விரும்பாத பட்சத்திலும், அது உம்முடைய தெய்வீக சித்தத்தில் இல்லாதபோதும், பிதாவே, அவர்கள் நிமித்தம் அதை தடுத்துப்போடும். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து எங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்று நாங்கள் உணருகிறோம். ஆனால், ''நான் கர்த்தர், நான் மாறாதவர்“ என்ற அந்த தலைப்பில் பேசியிருக்கிறேன். எனவே நீர் இம்மானுவேலாக, மனித ரூபத்தில் இந்த பூமியில் நடந்து வந்த போது, ஒரு நாளில் ஒரு சிறிய ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அதை நீர் உணரும் அளவுக்கு அவ்வளவு விசுவாசத்தோடு அதைச் செய்தாள். மேலும், பிதாவே, இன்றிரவு உம்முடைய குமாரனாகிய இயேசு எங்களுடைய பிரதான ஆசாரியராயிருக்கிறார் என்றும் அவர் இன்றைக்கும் எங்கள் பெலவீனங்களால் தொடப்படக் கூடியவராய் இருக்கிறார் என்றும் உம்முடைய வார்த்தை கூறுகிறது. 108பிதாவே, இங்கு உள்ள வியாதிப்பட்டவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, அதென்னவெனில் இங்குள்ள குறைந்தபட்சம் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது சிலரோ, யாக்கோபு பிடித்துக் கொண்டது போல இந்த மக்களும் பிடித்துக் கொண்டு, அதுதாமே பரிசுத்த ஆவி என்பதை அவர்கள் அறிந்து கொண்ட பின்பு அவர்கள் ஆசீர்வதிக்கப்படும் வரைக்கும் அதை தளரவிடாமல் பிடித்துக் கொள்ளச் செய்யும். ஆண்டவரே, அதை மட்டும் நீர் செய்வீரானால் இங்குள்ள ஒவ்வொரு வியாதியஸ்தரும் அந்த மாறாத வாக்குத்தத்தத்தை பிடித்துக் கொண்டு, தங்கள் மேல் ஆசீர்வாதம் இறங்குகிற அந்த நிச்சயத்தை தங்கள் இருதயத்தில் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அதனோடு அவர்கள் தொடர்ந்து தரித்திருப்பார்கள். இப்பொழுது உம்முடைய பணிக்காக இந்த மக்களையும், இந்த செய்தியையும், என்னையும் உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். இதற்கு மேல் என்னால் செய்ய முடிந்ததும் அல்லது வேறு யாராலும் முடிந்ததும் இவ்வளவுதான், ஆண்டவரே. அது உம்மால் மட்டுமே செய்யமுடியும். எனவே நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்றும், நீர் ஒருவரே மாறாத தேவன் என்றும் இப்பொழுது உம்மை நீர் நிரூபித்துக் காண்பியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இதை கேட்கிறேன் ஆமென். 109அவருடைய ஆவியை நான் அவ்விதமாக உணரவில்லை, பாருங்கள்‚ அது ஒரு வரமே. அது ஒரு சிறிய குழந்தை பெற்றக்கொண்ட பரிசுத்த ஆவியைக் காட்டிலும் பெரிதானது என்று அர்த்தம் ஆகாது. வார்த்தையை ஜீவிக்க செய்வதற்கு அது வெறுமனே பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்பட்ட ஒரு வரமாய் இருக்கிறது. இப்பொழுது, அவர் அதை செய்யும் பட்சத்தில், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது வார்த்தை பிரத்தியட்சமானதாய் இருக்கிறது. அது வார்த்தை பிரத்தியட்சமானதாய் இருக்கிறது. இதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உள்ளத்தில் யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதை வெறுமென யோசித்துப் பாருங்கள். நீங்கள் சத்தமாய் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தாமே அமைதியாய் ஜெபியுங்கள். ''ஆண்டவரே, சகோதரன் பிரான்ஹாமுக்கு என்னைக் குறித்து ஒன்றுமே தெரியாது என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். என்னுடைய வியாதியைப் பற்றி அவருக்குத் தெரியாது. என்னைக் குறித்து ஒன்றும் தெரியாது. நான் அந்த ஊழியக்காரனை தொட முயற்சி செய்யவில்லை. ஆனால் நீர் தாமே பிரதான ஆசாரியராயிருக்கிறீர் என்று தெள்ளத்தெளிவாக அவர் எங்களுக்கு கூறியிருக்கிறார், அதை நான் வாசித்தும் இருக்கிறேன். இயேசுவானர் தன்னுடைய வஸ்திரத்தை தொட்ட ஸ்திரீயினிடத்தில் பேசினதைப் போல, இவர் என்னிடத்தில் பேசும்படிக்கு உம்மிடத்தில் கேட்டுக் கொள்கிறேன்“. 110அல்லது நீங்கள் வியாதியாய் இல்லாத பட்சத்தில், ''கர்த்தராகிய இயேசுவே, நான் எப்பொழுதும் இதைக் குறித்து, இந்த இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தில் சற்று சந்தேகப்படுகிறவனாயிருக்கிறேன். ஆனால் நான் என் கரத்தைக் கொண்டு திடமாய் பிடித்துக் கொள்ளக் கூடிய அசலான ஏதோவென்றை பெற்றுக் கொள்ள நான் விரும்புகிறேன். எனவே இங்கு உள்ள இன்னார், இன்னாரிடத்தில் அவர் பேசட்டும். நான் அவனுக்காக அல்லது அவளுக்காக ஜெபிக்கிறேன். அவ்விதமாய் அவர் பேசட்டும். நான் அதை விசுவாசிப்பேன்“. அது தாமே உங்களிடத்தில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துப் போடும். அது யாக்கோபு பிடித்துக் கொண்டது போல நீங்களும் பற்றிப் பிடித்துக் கொள்ள கூடிய ஏதோ காரியமாய் இருந்து, “இது தான் அது”, என்று சொல்வீர்கள். அவன் ஒரு விசை தேவனை பற்றிப் பிடித்துக் கொண்டு, ''இதோ நான் இங்கிருக்கிறேன், என்னால் அதை பிடித்துக் கொள்ள முடிகிறது“, என்றான். அது உங்கள் யாவரையும் விசுவாசிக்கும்படி செய்யுமா? உங்களால் முடியுமானால், சுற்றியுள்ள யாவரும் உங்கள் கரங்களை உயர்த்தி சொல்லுங்கள், ”எனக்குள் வெறுமென விசுவாசம் உயர்த்தப்படட்டும், அது அப்படியாக நடப்பதை நான் காண விரும்புகிறேன்“. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அதை செய்வார் என்று நான் கூறவில்லை. அவர் அதை செய்வார் என்று நான் நம்புகிறேன். 111ஒரு சமயம் நான் மலையிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தபோது, அவர், நீ மட்டும் விசுவாசித்தால், எல்லா காரியமும் கைக்கூடும் என்று வலிப்பு நோயால் அவதிப் பட்டுக்கொண்டிருந்த பையனின் தகப்பனாரிடத்தில் கூறினார். நம்மால் விசுவாசிக்க மட்டும் கூடுமானால்‚ வியாதியோடும், தேவையோடும் யாராவது இருப்பீர்களானால், விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். “உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லா காரியமும் கைக்கூடும்;”. ''அதற்காகதான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்“, என்று நீங்கள் கூறுவது தான் என்ன, சகோதரன் பிரான்ஹாம்? இங்கிருக்கின்ற ஒவ்வொருவரும், அநேக முறை பீனிக்ஸ்ல் இருந்த நானும் எந்த ஒரு சந்தேகமுமின்றி, இப்படிப்பட்ட செய்தியை பிரசங்கித்தபோது அதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அது ஒரு வெளிச்சமாயிருக்கிறது. அதை புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். உங்களில் அநேகர் அந்த வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பார்க்கவில்லையா? அதை புகைப்படம் எடுத்தும் மற்றும் காட்சிப்பொருளாக வைத்திருக்கிறார்கள். எங்கே, அதுதாமே வாஷிங்டன் டி.சி.யில். இன்னொரு நாளில் அதை மறுபடியும் இங்கே புகைப்படம் எடுத்தார்கள். 112பாருங்கள்‚ இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தின் ஊடாக வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் தான் என்று அதுதாமே சாட்சி பகர்கிறதாய் இருக்கிறது. அந்த அக்கினி ஸ்தம்பமானது மாம்சமாகி நம்மத்தியில் வாசம் செய்தது. ''நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், தேவனிடத்திற்கே திரும்புகிறேன்“ என்று இயேசு சொன்னார். அவருடைய உயிர்தெழுதலுக்கு பிறகு அவர் உன்னதத்திற்கு ஏறினார். அவர் மறுபடியும் வந்த போது, தமஸ்குவுக்கு போகிற வழியில் பவுலை சந்தித்தார். அவர் மறுபடியும் வெளிச்சமாக தோன்றினார். பவுலால் பார்க்க முடிந்தது. மற்றவர்களோ அதை பார்க்க முடியவில்லை. அது அவனை குருடாக்கிப் போட்டது. அவன் குருடானான். சூரியனைப் போல் பிரகாசிக்கிற இந்த வெளிச்சத்தைப் பார்த்து, ”ஆண்டவரே, நீர் யார்? என்று கேட்டான்“. அதற்கு அவர் “நான் இயேசு” என்றும் ''முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்“ என்றும் சொன்னார். இப்பொழுது, அதே வெளிச்சத்தின் புகைபடமாக இது இருக்கிறது. அது தாமே அதே வெளிச்சமாகவும், அதே அக்கினி ஸ்தம்பமாகவும், தமஸ்குவுக்கு போகிற வழியில் பவுலை சந்தித்த அதே இயேசுவாக இருக்குமானால், அதே கிரியைகளை அது மறுபடியும் செய்யும். அது செய்தே ஆக வேண்டும். இதோ அது மறுபடியும் இங்கே இருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. இப்பொழுது பிசாசு எதை வேண்டுமானாலும் சொல்ல முயற்சி செய்யட்டும். 113நீல நிற உடை அணிந்து இங்கு உட்கார்ந்திருக்கிற சிறிய சீமாட்டியே, சைனஸ் தொல்லை நிமித்தம் ஜெபித்துக் கொண்டிருக்கிற நீ உன் முழு இருதயத்தோடு விசுவாசித்தால் அது உன்னை விட்டு நீங்கிப்போகும். நீ அதை விசுவாசிப்பாயா? அப்படியானால் நீ அதைப் பெற்று கொள்வாய். இந்த ஸ்திரீயை நான் பார்த்ததே இல்லை. என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. அந்த காரியங்கள் எல்லாம் உண்மைதானே, அப்படியில்லையா சீமாட்டியே? அது உண்மையானால் உன் கரத்தை உயர்த்தி முன்னும் பின்னுமாக அசைக்கவும். (அந்த சகோதரி, “அவையெல்லாம் உண்மைதான்” என்று கூறுகிறாள்). நீ அதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருந்தாய், ''தேவனே அவர் தாமே...“ விசுவாசமுள்ளவளாய் இரு. இங்கே பின்னால் ஒரு அருமையான சிறிய சீமாட்டி உரோமத்தினால் (Fur) ஆன மேல் சட்டை அல்லது அது போன்று ஒன்றை அணிந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அதோ அந்த வெளிச்சம் அங்கே இருக்கிறது. அந்த ஸ்திரியின் மேலாக இருக்கிறதை உங்களால் பார்க்க முடியவில்லையா? அந்த ஸ்திரீ மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறாள். அவளைக் எனக்குத் தெரியாது. என் வாழ் நாளில் அவளைப் பார்த்ததும் கிடையாது. நாம் அந்நியர்களானால், உன்னுடைய கரத்தை உயர்த்தும். ஆனால் கவனியுங்கள். இது உண்மைதானே, ஒரு அசலான புதிய உணர்வு உன்னைச் சுற்றிலும் இல்லையா? அசலான இனிமையான, மென்மையான, உணர்வு? அது அந்த வெளிச்சம் தான். சரியாக அதைநான் பார்க்கிறேன். இங்கே உனக்கு ஒரு கட்டி இருக்கிறது. ஒரு கட்டி மட்டுமல்ல ஆனால் பல கட்டிகள். அவைகள் உன் சரீரம் முழுவதுமாய் இருக்கிறது. அது சரிதானே. அது அவ்விதமாக இல்லையா? நீ விசுவாசிக்கிறாயா? தேவன் உன்னை சுகப்படுத்தி, ஆரோக்கியமாக ஆக்குகிறார். விசுவாசமுள்ளவளாய் இரு. நீ விசுவாசிக்கிறாயா? 114இங்கே, இந்த குழந்தைக்குப் பின்னால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி ஒரு சிறிய சீமாட்டி சரியாக இங்கே பின்புறத்திலிருந்தபடி தன்னுடைய கரத்தை உயர்த்தியிருக்கிறாள். அந்த சீமாட்டியை நான் அறியேன். அவளை பார்த்ததும் இல்லை. நாங்கள் அந்நியர்களாயிருக்கிறோம். அது சரி தானே, சீமாட்டியே? ஆனால் நீயோ உன்னுடைய இருதய கோளாறை தேவன் சுகப்படுத்தும்படிக்கு ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது உண்மையானால் இவ்விதமாய்உன் கரத்தை அசைத்துக்காட்டு. இயேசு உன்னை சுகமாக்கினார். நீ வீட்டிற்குச் சென்று சுகமாயிரு. இப்பொழுது, உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்) உங்களால் விசுவாசிக்கக்கூடுமானால், எல்லாம் கைக் கூடும். விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். எல்லாவற்றையும் வெறுமனே விசுவாசியுங்கள் அதை சந்தேகப்பட வேண்டாம். 115திருமதி. ஷாரிட் இருக்கையிலிருந்து, இரண்டு ஸ்திரீகளுக்கு அடுத்தாற் போல் சரியாக இங்கே ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். அவள் அங்கே உட்கார்ந்தபடி ஜெபித்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு வலியுடன் கூடிய மூட்டுவீக்கம் (Arthritis) உள்ளது. சீமாட்டியே, அதை விசுவாசி. அதை விசுவாசிக்கிறாயா? சரி. அதை பெற்றுக்கொள். ''சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்“. அவ்விதமாய் இருக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. அவர் மாறாத தேவன்‚ எனக்குச் சொல்லுங்கள், அவர்கள் யாரைத் தொட்டார்கள் என்று. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் இந்த மக்களை இதற்கு முன் பார்த்ததும் இல்லை. அவர்களைப் பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை என்றும் என் இரண்டு கரங்களையும் பயபக்தியுடன் உயர்த்திய வண்ணம் கூறுகிறேன். ஆனால் இங்கே இப்பொழுது பிரசன்னமாயிருக்கிறவர் முன் உங்கள் ஜீவியத்தை மறைக்க முயற்சித்தாலும் அது கூடாத காரியம். அது சரி. அவர் இங்கே இருக்கிறார். அவர் கிறிஸ்து. அது உண்மை. அவர் மாறாத தேவன் என்ற அவருடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. அதை நீங்கள் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு, ''அது என்னுடையது, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்”, என்று கூறுங்கள். 116பரலோகப் பிதாவே, இந்த வியாதிப்பட்ட மக்களாகிய இவர்களை உம்மிடத்தில் கொண்டு வருகிறேன். அவர்கள் தேவையில் இருக்கிறார்கள். நேற்றைய இரவு நாங்கள் கூறிய வண்ணம், ஒரு சமயம் தாவீது என்னும் பேர் கொண்ட ஆடுகளை மேய்ப்பவன் இருந்தான். அவன் தன்னுடைய தகப்பனாரின் ஆடுகளைப் பார்த்துக் கொள்ளும்படிக்கு அவனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இன்று இரவும் இங்கே அநேக மேய்ப்பர்கள் உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள். தேவனே, அவன் தன்னையும், தன் மந்தையையும் பாதுகாத்துக் கொள்ள ஒரு கல்லெறியும் கவணைத் தவிர (Sling shot) வேறேதுவும் பெரிதாக அவனிடத்தில் இல்லை. அது அவனுக்கு போதுமானதாய் இருந்தது. ஒரு நாளில் ஒரு சிங்கம் ஆட்டு மந்தைக்குள் வந்து ஒருஆட்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டது. பரலோகத்தின் தேவன் தன்னுடன் இருக்கிறார் என்று தாவீது அறிந்திருந்தான். எனவே அவன் தன்னுடைய கல்லெறியும் கவணை எடுத்துக் கொண்டு அந்த ஆட்டின் பின்னே சென்றான். அவன் அந்த கவணைக் கொண்டு சிங்கத்தை அடித்து கீழே தள்ளி அதைக் கொன்று போட்டு அந்த ஆட்டை உயிரோடு மீட்டு வந்தான். 117பிதாவே, சிங்கத்தைக் காட்டிலும் பெரிதான வியாதிகளை கொண்டு பிசாசு உம்முடைய ஆடுகளில் அநேகரைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஜெபம், விசுவாசம் என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய கவண் என்னிடத்தில் இருக்கிறது. மருத்துவ விஞ்ஞானத்தின் ஆயுதத்தோடு அதை ஒப்பிடும் போது அது (கவண்) பார்ப்பதற்கு ஒன்றுமில்லாததாய் இருக்கிறது. ஆனால், தேவனே, நீர் தாமே இந்த ஜெபத்தை சரியாக அந்த இடத்திற்குச் சென்றடையத் தக்கதாக இயக்கும். பிசாசே, அவர்களை விடுவி. அந்த ஆட்டைத்தேடி பின்னாக நான் வருகிறேன். அவர்களை விடுவி. இன்றிரவு நான் அவர்களை மறுபடியும் பிதாவினுடைய மேய்ச்சலுக்கு கொண்டு வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வியாதி என்னும் ஒவ்வொரு பிசாசையும் கடிந்து கொண்டு அவைகளை இந்த மக்களை விட்டு வெளியே துரத்துகிறேன். இந்த மணி வேளை முதற்கொண்டு அவர்கள் தாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே விடுதலையாகிப் போகட்டும். உங்கள் சுகத்தை விசுவாசிக்கிற நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று “நான் என்னுடைய சுகத்தை இப்பொழுது ஏற்றுக் கொள்கிறேன். கிறிஸ்துவாகிய அவர் மீது என் கரத்தை வைத்து என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்” என்றுகூறுங்கள். உங்கள் மேய்ப்பரிடம்...